அழையா விருந்தாளி

ஆறு கால்கள் கொண்ட
அற்புதப் படைப்பே!

எதிர்கால நிகழ்வை
அறியும்
உன் அறிவை
என்ன சொல்லி நான் பாராட்ட...

வருங்கால வறுமை
வாராமல் தடுக்கும்
உன் நிகழ்கால
சேமிப்பை
என்ன சொல்லி நான்
பாராட்ட...

ஒத்தையாய் ஒதுங்கிப்
போகாமல் ஒத்துழைக்கும்
உன் ஒற்றுமையை
என்ன சொல்லி நான் பாராட்ட...

செவி இல்லாதபோதும்
செம்மையாக வாழும்
உன் செருக்கை
என்ன சொல்லி
நான் பாராட்ட...

அவசரப் பயணம் என்றாலும்
அணிவகுத்துப் போகும்
உன் அழகை
என்ன சொல்லி நான் பாராட்ட...

அதிர்வை உணர்ந்து
ஆயத்தம் கொண்டாயே!
அதைக் கண்டு
ஆராய்ச்சியாளர்களும்
அதிர்ந்து போனார்களே!

உனைவிட
பத்துமடங்கு எடையைப்
பதறாமல் சுமந்தாயே!
அதைக் கண்டு
வீரர்களும் வியந்து போனார்களே!

சின்னஞ்சிறு
எறும்பே
உன் சுறுசுறுப்பிற்க்கு
நிகர் எவரும் உண்டோ?

எழுதியவர் : கலா பாரதி (20-Mar-18, 9:35 am)
பார்வை : 53

மேலே