ஒற்றுமையே வலிமை

இதழின் ஒற்றுமை
மலராக மணக்கும்..!
இறகின் ஒற்றுமை
சிறகாக பறக்கும்..!

மனித ஒற்றுமையால்
மதங்களை அழித்தால்
புனித பாதையில்
பூமியும் சுழலும்..!

தனியான நூல்கள்
துணியாக வலிமை..!
துளிகள் சேர்ந்தால்
பனிகளும் குளமே..!

நானென்பது நாமானால்
நாளும் நலம்தானே..!
வாழும் வாழ்க்கைக்கு
வளம்தரும் பலம்தானே..!

#ஒன்றுபடுவோம்
#வென்றுவிடுவோம்

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:05 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 2197

மேலே