விவசாயின் மகிழ்ச்சி

பருவ மழை வந்தாச்சு
பச்சைவயலு நனைஞ்சாச்சு..!
அரும்பாடு பட்டதெல்லாம்
ஆகாயத்துக்கு புரிஞ்சாச்சு..!

எந்த சாமி புண்ணியமோ
எம்மனசு குளுந்துருச்சு..!
வயித்துல பாலு வாக்க
வயலு நல்லா நிறைஞ்சுருச்சு..!

பூச்சி மருந்த அடிக்காம
புழுக்கைய அள்ளி கொட்டணும்..!
காச்சி ஊத்துன குமரி போல
கண்ணு கருத்துமா பாத்துக்கணும்..!

வரப்பை கொஞ்சம் உயரமாக்கி
வயல சுத்தி வேலி வைக்கணும்..!
கொழுப்பெடுத்த ஆடு மாடு
கொலை பசில போய்டும் தின்னு..!

மண்ணை கொஞ்சம் கையிலெடுத்து
மறக்காம சுத்தி போடணும்..!
பக்கத்து வயக்காரன்
பயிர் மேல கண்ணு வப்பான்..!

கருப்பட்டி பொங்கல் வச்சு
கருப்பசாமிய வேண்டிக்கணும்..!
கதிரறுத்து முடிஞ்சவுடன்
காணிக்கைய செலுத்திரணும்..!

பச்சைவயலு பருவமடைய
பருவ மழை தொடரணும்..!
பட்டினியா கிடக்கும் பிள்ளைகளுக்கு
பழைய கஞ்சியாவது கிடைத்திடணும்..!

பட்டினியா கிடக்கும் பிள்ளைகளுக்கு
பழைய கஞ்சியாவது கிடைத்திடணும்..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:35 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 2432

மேலே