நானும், கடவுளும்

கடவுளைக் கண்டேன்.
அவன் கற்சிலையாக நின்றான்.
வந்தவர்கள் எல்லோரும் அது வேண்டும்,
இது வேண்டும் என்று கடவுளைக் கேட்டார்கள்.
நான் புன்னகையோடு நின்றிருந்தேன்.

எல்லாம் இருந்தும் பிச்சையெடுக்கும் பக்தர்களைப் பாராமல்,
என்னை நோக்கிய கடவுள், " ஏன்டா எல்லாரும் வேண்டிக் கொள்கிறார்களே. நீ மட்டும் ஏன் சிரித்துக் கொண்டு சும்மா இருக்க? நீயும் கேளு. ",என்றான்.

அதற்கு நான், " கேட்காமலே உயிர் வாழ போதுமான அனைத்தும் கொடுத்துவிட்டாய்.
இனி என்ன இருக்கிறது உன்னிடம் நான் பிச்சை கேட்க?
சரி நீ எப்படி இருக்க?
வேளாவேளைக்கு சாப்பாடு , அபிஷகக் குளியல், பஞ்சாமிர்த குளியல், தங்கத்தாலே ஆடை எல்லாம் தவறாமல் கிடைக்கிறதா? ", என்றேன்.

அதைக் கேட்ட இறைவன் கண்ணீர் சிந்தினான் ஆனந்தத்தால்.
" தினம் வருவோர், போவோர் ஆயிரக்கணக்கில் தங்களுக்காக மட்டும் வேண்டிக் கொள்வர்.
எவ்வளவு இருந்தாலும் போதாது. இன்னும் கேட்பர்.
ஆனால் நீ மட்டும் வித்தியாஷமாகவே இருக்கிறாய்.
சற்று பொறு. உன்னுடன் கொஞ்சநாட்கள் வாழ நானும் உன்னுடன் வருகிறேன். ", என்று புறப்பட்டான் கடவுள்.

அப்போ கோவில்?
பக்தர்கள்?

அவர்களுக்கு நானா முக்கியம்?
கற்சிலையை வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Mar-18, 9:16 am)
பார்வை : 830

மேலே