உனக்காக
நித்தம் நித்தம்
உன்
வருகைக்காக
காத்திருக்க
உன் காலடிசத்தம்
மட்டும் எனக்குள்
கேட்டுக்கொண்டே
இருக்க
உனை வரவேற்க
தயாராய்
முகத்தில்
சிறுநகையோடு
ஒவ்வொரு நாளும்
காத்திருக்க முடியா
காலம்
போகிற போக்கில்
என் இளமையை
களவாடிவிட்டு
மிச்சத்தை எச்சமாய்
விட்டுப்போனதே
உன்னை காண்பேன்
என்ற நம்பிக்கையில்
நான் வாசலில்
இருப்பதும் மாறவில்லை
உன் காலடிச்சத்தமும்
ஓயவில்லை
ஆனால் நீ மட்டும்
என்
எதிரில் இல்லை..,
நா.சே..,