‘இன்ஷா அல்லாஹ்- இறைவன் விரும்பினால்
‘இன்ஷா அல்லாஹ்-
இலங்கை கண்டி மாவட்டத்தில் உள்ள விக்டோரியா அணை இலங்கையின் மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை. இவ் அணையில் ஒரு நீர் மின்நிலையமும் உள்ளது. இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர்மின்நிலையமாகும். இலங்கையின் உயரமான அணையும் இதுவே. 1978-ஆம் ஆண்டு கட்டத்தொடங்கபட்ட இந்த அணை 1985 ஏப்ரலில் நிறைவடைந்தது. இவ்வணை கட்டும் போது பழைய தெல்தெனிய (Teldeniya) கிராமம் மூழ்கி, புதுக் கிராமம் உருவாக்கப் பட்டது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிய காலத்தில் பழைய கிராமம் தெரியும் .
அப்துல் காசீம் தெல்தெனிய ஊரில் உள்ள கல்லூரி ஒன்றில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர். கொழும்பு பல்கலைகத்தில் படித்து பெளதீகத்தில் சிறப்பு பட்டம் பெற்று கொழும்பு சகிரா கல்லூரியில் சில வருடங்கள் படிப்பித்து, கண்டியில் உள்ள வைர வியாபாரி பசீரின் ஒரே மகள் அலீமாவைவைத் திருமணம் செய்தவர். நாடோடி, போன்று யாழ்ப்பாணம் . புத்தளம் கொழும்பு என்று . அரசியல் ,கல்வி வேலை காரணத்தால் புலம் பெயர்ந்து, நான்காம் தடவையாக முஸ்லீம்கள் அனேகர் வாழும் ஊரான தெல்தெனியாவுக்கு இடம் பெயர்ந்தார் காசீம்..
அவரின் வாப்பா காதரும் உம்மா ஜெசீமாவும் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆசிரியர்கள் . காதரின் வாப்பா முகமது உமர். ஒரு தமிழ் புலவர், கவிதை அவருக்கு தானே வரும்.. அவர் தமிழ் இலக்கணம் படித்தது வித்துவான் சுப்பிரமணிய ஐயரிடம் . திருமண வாழ்த்து மடல் எழுத எல்லா இனத்தவர்களும் அவரை நாடி வருவார்கள். எல்லாப் பிள்ளைகளுக்கும் சாதி மத வித்தியாசம் பாராமல் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுப்பார் . காதருக்கும் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தவரும் சுப்பிரமணிய ஐயரே.
உமரின் வாப்பா தமிழ் நாட்டில் உள்ள கீழக்கரையில் இருந்து யாழ்ப்பணக்குடா நாட்டின் தென்மராட்சியில். மீசாலைக்கு அருகே உள்ள உசன் என்ற கிராமத்துக்கு வியாபாரம் நிமித்தம் வந்தவர். பின்னர் அங்கிருந்து நல்லூருக்கு இடம் பெயர்ந்து குருக்கள் வளவில் வாழ்ந்தவர் . டச்சு ஆட்சி காலத்தில் அவ் வளவில் முருகன் கோயில் கட்ட வேண்டி இருந்ததால் அங்கிருந்து ; நாவான்துறை பகுதியில் உள்ள முஸ்லீம் குடும்பங்கள் வாழும் சோனகர் தெருவுக்கு இடம் பெயர்ந்தார்.
. யாழ்ப்ப்பாணத்தில் உள்ள சோனகர் தெருவில் 34 ஆம் இலக்க வீட்டில் காசீம் பிறந்து வளர்ந்தார் .முஸ்லீம் என்றாலும் அவரின் தாய் மொழி தமிழ். குரான் படிப்பதுக்கு ஓரளவுக்கு அரபு மொழி தெரிந்திருந்தார் . அவர் படித்தது ஆங்கிலத்தில். யாழ்ப்பாணத் தமிழ் கலாச்சார்தில் வளர்ந்தவர் அப்துல்.காசீம் . சாதி மதம் பார்க்காதவர் . அவர் கல்வி கற்றது வன்னர்பண்ணை வைதீஸ்வரன் கல்லூரியில்.. அங்கு கல்வி பயின்ற நான்கு முஸ்லீம் மாணவர்களில் காசீமும் ஒருவர். அவரின் திறமை ஆசிரியரகளை கவர்ந்தது. வகுப்பில் எபோதும் முதலாவதாக வருவார்.
சிங்கள மட்டும் சட்டம், தரப் படுத்தல் சட்டம், இனக்கலவரங்கள் ஆகியவற்றினால் தமிழ் விடுதலலை புலிகள் இயக்கம் உதித்தது . படிப்படியாக் மாணவர்கள் அந்த இயகத்துக்கு ஆதரவு அளித்தார்கள் . காசீமின் நண்பன் சீலன் படிப்பை விட்டு இயக்கத்தில் போய் சேர்ந்தான். காசீமையும் தன்னோடு வந்து இயக்கத்தில் சேரும் படி அவன் கேட்டபோது காசீமின் பெற்றோருக்கு விருப்பமில்லை. அனால் சீலனின் வேண்டுகோளின்படி . இயக்கம் நடந்தும் பத்திரிகைக்கு உணர்ச்சியுள்ள தமிழ் கட்டுரைகள் “உமர்” என்ற தன் பாட்டனின் புனைப் பெயரில் காசீம் எழுதிவந்தார், . அது அவரின் பெற்றோருக்கு தெரியாது
இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில்அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் , திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் , 1990 இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் இயகத்தின் மேல் விருப்பம் இல்லாத சில முஸ்லீம்கள் இந்திய அமைதிப் படைக்கு உளவாளிகளாக இயங்கினர்,, சில முஸ்லீம்கள் செய்த தவறினால் இயகத்துக்கு அந்த சமூகத்தின் மேல் நம்பிக்கை இழக்க வைத்தது . அதனால் 75.000 யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் பல காலம் தாம் வாழ்ந்த வீடு வாசல்களை விட்டு புத்தளம் மன்னர் போன்ற இடங்களுக்கு சில மணி நேரத்தில் உடமைகளை விடு இடம் பெயறவேண்டிய நிலை ஏற்பட்டது.
புத்தளத்துக்கு இடம் பெயர்ந்த காசீமின் பெற்றோருக்கு அது புது சூழல் . யாழ்ப்பாணம் சோனகர் தெருவில் இருந்த தன் சொந்த வீட்டை விட்டு வந்தது அவருக்கு பெரும் கவலை. அவர். மகன் காசீமைப் பார்த்து கேட்டார் : :”மகன் எப்போ யாழ்ப்பாணத்தில் உள்ள எங்க வூட்டுக்கு திரும்பிப் போவம்”?
:”இன்ஷா அல்லாஹ் வாப்பா” காசீம் பதில் சொன்னான்.
****
காசீம் புத்தளம் சாஹிரா கல்லூரியில் படித்து, கொழும்பு பல்கலைகழகத்துக்குச் சென்று படித்து ,
அறிவியல் பட்டதாரியானார். கொழும்பு சாஹிரா கலூரியில் ஆசிரியரானார்
“மகன் காசீம் தம் அருகே இருப்பதையே வாப்பா காதரும் உம்மா ஜெசீமாவும் விரும்பினர்
ஒரு நாள் காதர் தன் மகனிடம் கேட்டார்
“மகன் நீர் படித்த புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு அறவியல் ஆசிரியராக வர உமக்கு நியமனம் கிடைக்குமா? . எங்கள் வயது வந்த காலத்தில் நீர் எம்மருகே இருப்பதை விரும்புகிறோம்”
:”இன்ஷா அல்லாஹ் வாப்பா” காசீம் பதில் சொன்னான்.
****
தெல்தெனியாவுக்கு அருகே கண்டியில் உள்ள ஒரு வைரவியாபாரி பசீரின் மகள் அலீமாவை திருமணம் செய்தார் காசீம் . தன் மகள் அலீமா தன் அருகே இருக்க வேண்டும் என்று அவளின் பெற்றறோர் விரும்பியதால் அரசியல்வாதியின் உதவி பெற்று மருமகனை தெல்தெனியவில் உள்ள ஒரு கல்லூரிக்கு கொழும்பில் இருந்து இடம் மாற்றம் செய்வித்தார் காசிமின் மாமனார் பசீர். .
மாதம் ஒரு முறை காசீம் மனைவியோடு புத்தளம் போய் பெற்றோரைப் பார்த்து வருவார்
ஒரு நாள் காதர் தன் மகனை பார்த்துக் கேட்டார் “ மகன் உம்முடைய வாப்பாவுக்கும், உம்மாவுக்கும் வயசு ஏறுது நீர் இப்போ வெகு தூரம் எங்களை விட்டு போய் விட்டீர், எப்போ நங்கள் எல்லோரும் திரும்பவும் எங்கள் யாழ்ப்பாணம் சோனகர் தெரு வூட்டுக்கு போவம் “? :
”இன்ஷா அல்லாஹ் வாப்பா” காசீம் பதில் சொன்னான்.
****
தெல்தெனியாவில் முஸ்லீங்களும் சிங்களவருக்கும் இடையே இனக் கலவரம் வெடிக்கும் என்று காசீமும் அலிமாவும் எதிர்பார்கவில்லை . முஸ்லீம் வீடுகள் சூறையாடப் .அவர்கள் இருவரும் உயிர் தப்பியது அல்லா கிருபை .
இனக்கலவரம் நடந்து முடிந்தது ஒரு மாதத்தில் காசீமுக்கு. மீ இருபது வருடங்களின் பின்னர் ள்குடியேற்றம் இடம்பெறுவதால் அதன் கீழ் காசீமுக்கு யாழ்ப்பாணம் வைதீஸ்வர கல்லூரிக்கு மாற்றலாகி கடிதம் கல்வி அமைச்சில் இருந்து வந்தது . காசீம் உடனே தன் பெற்றோருக்கு போன் செய்து செய்தி சொன்னார். அவர்களுகுப் பெரும் மகிழ்ச்சி . காசீமின் பெற்றோர் குடும்பம் திரும்பவும் தங்களின் யாழ்ப்பாணம் சோனகர் தேரு இலக்கம் 34 வீட்டுக்கு குடி புகுந்தனர்.
ஒரு நாள் காதர் மகனிடம் கேட்டார் “ மகன் நீர் படித்த கல்லூரிக்கே ஆசிரியராக வந்துவிட்டீர் .. நாங்கள் எங்கள் சொந்த வீட்டுக்கு வந்திட்டோம்.. சோனகர் தெருவில் எல்லாம் புது முகங்கள். பரவாயில்லை.. எனக்குத் தமிழ் படிப்பித்த சுப்பிரமணிய ஐயரும் மோசம் போயிட்டார் . அது சரி மகன் எப்ப உமக்கு வைதீஸ்வர கல்லூரியின் தலமை ஆசிரியர் பதவி கிடைக்கும் “?
”இன்ஷா அல்லாஹ் வாப்பா” காசீம் சொன்னார்