கடிவாளமிடுகிறேன்

அழகில் மயங்கிவிடாதிரு மனமே.
உடல் அழகில் மயங்கிவிடாதிரு மனமே.
மயக்கம் உன்னில் ஏற்பட்டால் தடுமாற்றம் என்னில் ஏற்படும்.
என் செயல்களில் ஏற்படும்.

கண்டதை மேயாதிருங்கள் கண்களே,
நீங்கள் மேய்வதெல்லாம் மனதைப் பாழாக்குகின்றன.

நல்லதில் நிலைத்திரு அறிவே,
கண்டபடி சிந்திப்பதால் உடல் மாற்றங்கள் கண்டபடி மாற்றமடைகின்றன.

கடிவாளமிடுகிறேன் எனக்கு நானே,
நீயும் முயற்சி செய் நண்பா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Mar-18, 4:54 pm)
பார்வை : 835

மேலே