வனப்பின் பரிவாண நிலை
என் செவியில் ஒலிக்கும் ரீங்காரம்
அவள் கவின் மொழிகள்
என் நெஞ்சில் வரையும் பூக்கோலம்
அவள் கரும் விழிகள்
பருவம் அவள் மீது பெய்தது
அழகின் அடை மழை
உருவம் செதுக்கிய வைரச் சிலை
உடலோ சிற்பக் கலை
கவர்ச்சிக் கடலில் நீந்தினாள் காந்த அலை
படைப்பில் அடைந்தான் இறைவன் இங்கு
வனப்பின் பரிவாண நிலை
ஆக்கம்
அஷ்ரப் அலி