நெகிழி

வெஞ்சூட்டில் நோய் படைப்பேன்
தரை கறை படாது பொருள் கட்டிக் காப்பேன்
தூய்மையின் குரல் வளை நெறித்து அழிப்பேன்
நானும் கடவுள் தான்! எனக்கும் அழிவில்லை!
நல்லடக்கமோ மறுவாழ்வோ கிட்டாதெனில்
பேயுமாகிப் பரவிப் பரமும் நான் ஆவேன்
பயன்படுத்திப் புறக்கணிக்கும் முன் பிற்பயன் கணிப்பீர்!

எழுதியவர் : Omkumar (27-Mar-18, 1:23 am)
பார்வை : 119

மேலே