பூமியில் சிந்திய துளிகள்

வெற்று படிகளை வெற்றிப்படிகளாக்கி மூச்சு பிடித்து முன்னேறினேன்...

தோல்வியின் ரணங்களில் வெற்றியின் வேர்வைகள் கண்டேன்...

என் கனவுகளுக்கு உழைப்பையே உணவாக்கி உன்னதம் புரிந்தேன்....

ஆனால்,வலியோடு போராடி வழிகண்டு எடுத்த என் வைர கற்களுக்கு உலகம் தந்த சிம்மாசனம் குப்பை தொட்டி தானே....


அறியாசனம் வேண்டாம்,உற்சாகம் கேட்டேன்..

பார் போற்றும் விழா வேண்டாம், பாராட்டும் உதடுகள் ஒன்றோ இரண்டோ கேட்டேன்...

மகுடம் வேண்டாம்,என் திறமை கேற்ற முண்டாசு கேட்டேன்...

ஆனால்,அங்கீகாரம் இல்லாத அனாதை ஆனேன்...

சோக புயலில் வலுவிழந்து, வழி இழந்து,தோல்வியின் ரணம் அடைந்து கண்ணீர் கடலில் கைதான போது...

என் பக்கம் பார்த்தேன் ,நீடித்த அன்பு செய்வர் யாருமில்லை..

ஆறுதல் சொல்ல ஓர் ஆளில்லை..

திக்கெட்டும் சிதறிய கண்ணீர் துளிகளை சேர்த்து வைத்தே, அன்பு காட்டி அரவணைத்து
நல்வழி கோரும் நண்பரும் இல்லை...

சிந்திய துளிகளை போல் காதலும் இன்றில்லை....

நம்பிக்கை மாமருந்திட்டு நெஞ்சுரம் அளிக்கின்ற ஆசானை ஒருநாளும் கண்டதில்லை....

ஒவ்வொரு இதயத்தின் துயர் துடைக்கும் என் காய்ந்த இமைகளின் வழிகின்ற நீர் துடைக்க ஒரு விரல் இல்லையோ?

பரவாயில்லை...!
அரை நிமிடத்தில் அணைந்திடும் அகல் விளக்கை துண்டிவிடத்தானே விரல்கள் வேண்டும்.,
உலகத்திற்கே ஒளி தரும் சூரியனை தூண்டிவிட விரல்கள் விதிவிலக்கன்றோ...?

செவிட்டு உலகமே!உணக்கொன்று சொல்வேன். காலமேனும் எழுத்தாணியால்,உன் இதயம் பிளந்து குருதியில் எழுத்திக்கொள்...
ஒருநாள் நிரகரிக்கப்பட்டவனை உன் இருகரம் கொண்டு வரவேற்பாய்....அன்று சபையேறும் என் திறமை,சாக்கடையில் உன் பெருமை.....!


கோவை. சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (27-Mar-18, 1:50 pm)
பார்வை : 85

மேலே