கல்லூரி

கனவுகள் பல கொண்டு
கண்ட கனவுகளையெல்லாம்
கண் முன் தோன்றும்
காட்சிகளாக்க நினைத்து
நாம் செல்லும் இடம் ,
கல்வி கற்க வந்த கல்லூரியில்
கடமை மறந்துவிட்டு
கல்லூரி பாடங்களை விரும்பாமல்
மனதில் கொண்ட கனவுகளையெல்லாம் மறந்து ,
கண்முன் தோன்றிய பெண்ணை விரும்பி
கற்க நினைக்கிறோம்
காதல் பாடம் ...
புத்தகம் எடுத்து ஒரு பக்கம் படிக்க நேரமில்லை
ஆனால் ,
கண்ணை மூடி கனவில் அவளுடனோ காதல் நடனம் ஆட நேரமிருக்கிறது ...
காதலோடு சேர்த்து
காலங்களும் , கனவுகளும் செல்கின்றன
உன்னை விட்டு ...
வாழ்க்கையில் வெல்லாத
உன்னை விட்டுச் செல்கிறாள்
அவளோ உன்னை விரும்பாமல் ...
தவறுகள் எல்லாம் நீ செய்துவிட்டு
கடைசியில் அவளையே
துரத்த நினைக்கிறாய்
இந்த உலகை விட்டு ...
வலிமையற்ற அவளோ
ஏதும் செய்ய முடியாமல்
உன் கைகளிலே
வீழ்ந்து போகிறாள் ...
நீயோ
குற்றங்கள் செய்துவிட்டு
நுழைகிறாய் சிறைச்சாலையில் ,
உன் தாய் தந்தையரோ
உன்னை நினைத்து
தினம் கண்ணீர்ச்சோலையில் ...
நான் குற்றங்கள்
சொல்லவில்லை காதலை ,
கடமை மறந்த காதலையே
குற்றம் சொல்கிறேன் ...
உங்கள் கனவுகளை காட்சிகளாக்கி விட்டு
மணமுடித்து ,
உங்கள் துணைவியுடன் சேர்ந்து
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
அன்பை பரிமாறி
வாழ்க்கை முடியும் வரை
பயிலுங்கள்
காதல் பாடம் !!!

எழுதியவர் : கவிஞன் (27-Mar-18, 5:57 pm)
Tanglish : kalluuri
பார்வை : 121

மேலே