அரை நிர்வாணம்

அரை நிர்வாணம்

சிறகுகள் விரித்த
ஒளிக்கூட்டில்
சிட்டுகள்.

மகிழ்ச்சி!
அரை நூற்றாண்டு
சாதனையின் பரிசு
இந்த
அரை நிர்வாணம்.

உணவு
அரை வயிறு.
கல்வி
கால் கிணறு.
வீடு
விடைபெறும் வரையில்
வினா.

காத்திருக்கிறார்கள்...
இவர்களுக்கு
பதினெட்டு
வயதாகும்
போது
வாக்கு வேட்டையாட
முழமையாக.

அதற்குள்
கிழிபடும்
மிச்சமிருக்கும்
காலாடை.


நன்றி: புகைப்பட கலைஞர் வெர்ஜினியா கேவல்

சாமி எழிலன்
27 03 2018

எழுதியவர் : சாமி எழிலன் (27-Mar-18, 2:57 pm)
Tanglish : arai nirvanam
பார்வை : 159

மேலே