முடிவுதான் தெரியவில்லை

-----------------------------------------------
ஓயாத போராட்டங்கள்
ஒழிகவென கோஷங்கள்
முற்றுப்பெறா பிரச்சினைகள்
முடிவுதான் தெரியவில்லை !
ஆறாத இரணங்களை
ஆற்றிட வழியறியாது
மாறாத நெஞ்சங்களால்
மாற்றமும் நிகழவில்லை !
நீர்த்திட்ட நிர்வாகம்
நீங்காமல் இருப்பதுவும்
வேடிக்கை பார்ப்பதுவும்
வாடிக்கை ஆனதிங்கு !
மவுனம் காப்பதாலே
மவுசும் கூடுமென்று
தப்பான கணக்கிலே
தள்ளாடும் அரசுமிங்கு !
அரைவயிறும் நிரம்பிட
அளவின்றி உழைத்திடும்
மழலைச் செல்வங்களால்
மனதும் வலிக்குது !
ஒருவருக்கே குடும்பத்தில்
ஒருவேளை உணவில்லை
பகல்வேஷம் தரிப்போர்க்கு
பயமேது உணர்ந்திடுவீர் !
தேய்கிறது தமிழகமும்
தேறிடுமா நம் வாழ்வும் !
தெளிவில்லா எதிர்காலம்
தெரிகிறது என் நெஞ்சில் !
பழனி குமார்
27.03.2018