என் கணவன்
கல்லூரியில் அறிமுகமாகியவர்
கல்லறை வரை வருபவர்....
காத்திருந்து காத்திருந்து
கையை பிடித்தவர்....
என்னுடனே இருந்தார்
எனக்கே தெரியாமல்...
எனக்கெனவே இருந்தார்
எனக்கே தெரியாமல்....
எத்தனை ஆண்டுகள்
இத்துணையை அறிய....
எத்தனை குழப்பங்கள்
இத்துணையை அடைய....
ஆயிரம் பேர் இருந்தாலும்
அவர் போல் இல்லை...
ஆடம்பரம் இல்லாவிட்டாலும்
அன்புக்கு எல்லை இல்லை...
இளகிய மனதோடு
இயல்வதை செய்பவர்....
கடுகளவு கரன்சி
கடலளவு காதல்...
பாசத்தை கட்டுவதில்
தாயை மிஞ்சியவர்...
அறிவை ஊட்டுவதில்
தகப்பனை மிஞ்சியவர்...
அடம் பிடிப்பதில்
குழந்தையை மிஞ்சியவர்,
உலகம்,
அன்னை மூலம்
அறிமுகமாகி...
தந்தை மூலம்
தெரிந்துகொண்டு...
கணவன் மூலம்
கற்று கொண்டேன்....
வெறும் கல்லாய் இருந்தேன்
சிற்பியை செதுக்கி..
சிற்பமாய் மாற்றி
சிலிர்க்க வைத்தவர்....
கோபம் கோடைகாலமாய்
திடீரென்று குளிர்காலமாய்...
உடலனைத்தும் ஆட
மனமோ என்னை நாட...
கால் கடுக்க
காத்திருக்க வைப்பான்...
காதல் வந்தான்
கட்டி அணைப்பான்...
சிந்தனை இல்லாத என்னை
சிந்திக்க வைத்தான்...
சிந்தனையாகவே மாறிய
என் சிந்தன்...