போராட்டம்

#போராட்டம்
நிறுத்தாத வீச்சு
நடுவில் சமாதன
பேச்சு
முடிஞ்சா போச்சு
போராட்டம்
புதுபுது யுக்திகள்
களத்தில்
கொய்த தலைகள்
மாறிய தலைகள்
நிரந்தரமானதோ?
நிறுத்தாத வீச்சு
நடுவில் யார்
சொலியாச்சி
காணாமலா போச்சு?
போராட்டம்
மேகங்களின்
அணிவகுப்பாய்
கடலலைகளின்
படையெடுப்பாய்
நிரந்தரமானதோ?
நிறுத்தாத வீச்சு
நடுவில் கரைத்தட்டி
நின்றா போச்சு?
போராட்டம்
காலம் காலமாய்
தொடர்கதையாச்சு
நிரந்தரமானதோ?
நிறுத்தாத வீச்சு..,
நா.சே..,