புத்தகப் புழுதி
புத்தகத்தை புழுதி தட்டி
பழுப்பு நிறப் பக்கங்களை
திருப்பும் போது ...
வள்ளுவனோ கம்பனோ
ஷேக்ஸ்பியரோ வோர்ட்ஸ் வொர்த்தோ
இன்றும் புதிதுதான் சுவைதான் !
புத்தகத்தை புழுதி தட்டி திருப்பினால்
புத்தகமே புழுதிகொட்டினால்
அந்தப் புத்தகத்தை விட்டெறிவதைத் தவிர
வேறென்ன செய்வது ?