முக்தியின் வழி பக்தி

காரணம் கேட்கும்
அறிவு ஒதுக்கி ,
காரியம் வேண்டிய
பிரார்த்தனைகள் நீக்கி ,
மனதின் எண்ணிலடங்கா
எண்ணங்கள் போக்கி ,
ஏதுமில்லாமல் கரைந்துபோக ,
எல்லை இல்லாமல் விரிந்துபோக ,
காலத்தினை கடந்துபோக,
பக்திவழியில் முக்தி .

கண்டிப்பாய்
சாதி ஒன்றும் தேடவேண்டாம் ,
சமயம் என்றும் சாரவேண்டாம்,
மொழிகள் சார்ந்தும் வாழவேண்டாம்,
மதங்கள் மாறி ஆடவேண்டாம்,

பக்தியின் பார்வையில்
மண் , மரம் , மனிதம் என்று
வேற்றுமை ஏதும்மில்லை .
வெறுப்பதற்கும் ஒன்றுமில்லை.

எழுதியவர் : (31-Mar-18, 1:06 pm)
பார்வை : 54

புதிய படைப்புகள்

மேலே