உனக்காக ஒரு உலகம்
புதிதாய் ஒரு உலகம் பூ மகளே உனக்காக நான் படைப்பேன்!
அங்கே
சூரியனையும் சந்திரனையும் உனக்காக காவல் வைப்பேன்!
நீ பேசும் மொழியில் ஒரு இலக்கியம் நான் படைப்பேன்!
வின்மீன்களை பிடித்து வந்து உன் வீட்டு குளத்தில் நீந்த விடுவேன்!
வீதி முழுவதும் மின்னல் கீற்றால் விளக்கு அமைப்பேன்!
உன் தேவை அனைத்தையும் நான் அறிந்து தீர்த்து வைப்பேன்!
என் உயிர் போகும் வரை உன்னுடன் நானிருப்பேன்!