உன் பார்வைகள்
என் கண்களுக்கு
பசிக்கிறது
உன்னைக் கண்டால்
அதன் பசி தீரும்
புற்களை மேய்ந்து
பருத்துவிட்ட
ஆட்டினைப் போல்
உன் பார்வைகளைத்
தின்றே பெருத்து விட்டது
என் காதல்
என் மனதின் வரப்பிற்குள்
நிற்க மறுக்கின்ற
நீர் நீ இந்த
காதல் விதை எவ்வாறு
முளைக்கும்
கண்களெனும்
இரு குழல் துப்பாக்கியால்
என் ஒரு இதயத்தில்
துளையை
உண்டாக்குகிறாய்!