கண்ணீரின் விலை
![](https://eluthu.com/images/loading.gif)
நான் உன்னைப் பூக்களில் தேடுகிறேன் !
நீயோ முட்களில் இருக்கிறாய் !
நான் உன்னைப் புன்னகையில் தேடுகிறேன் !
நீயோ கண்ணீரில் இருக்கிறாய் !
நான் உன்னை ஆலயங்களில் தேடுகிறேன் !
நீயோ உடைந்த உள்ளங்களில் இருக்கிறாய் !!!
"உன்னிடம் நான் எதையும் கேட்க வந்ததில்லை !
என்னைக் கொடுக்க வந்துள்ளேன்"!!!
பூவின் மீது படிந்த புழுதியை
பனித்துளி கழுவுவதுபோல ...
என் இதயத்தை என் கண்ணீரால்
கழுவிவிட்டேன் ! இப்போது
உனக்கு சமர்ப்பிக்கும் தகுதி ...
அது பெற்றுவிட்டது அது !!!
உன் ஊரின் பாதையில் முட்கள் ...
ஓவ்வொரு முள்ளும் குத்தும்போது ...
நீ முத்தமிடுவதாக எண்ணி ...
பூரிப்படைகிறேன் !!!
உன் கண்ணில் நான் சிக்கிக்கொண்டேன் !
விடுதலையை விட இந்தச்சிறை எவ்வளவோ ஆனந்தமானது !!!
எல்லபாதைகளும் உன்னையே அடைகின்றன !
உன்னை விட்டு பிரியும் பாதையும் கூட !!!
வாழ்க்கையா?மரணமா?தேர்ந்தெடு என்றாய்...
வாழ்வை தேர்ந்தெடுத்தேன் உன்னுடன் வாழ !
அதுவோ மரணம் நோக்கி அழைத்துச்செல்கிறது !!!
மூச்சு வாங்கும்பொழுதெல்லாம் பிறக்கிறேன் !
வெளிவிடும்போதெல்லாம் நான்இருக்கிறேன் !!!
ஒரே பிறவியில் எனக்கு எத்தனைதான் பிறவிகள் !!!
காதலுக்காக நீ நன்னென்றும் !
நான் நீயென்றும் ஆனோம் !!!
காதல் உண்டானபின்
நீ ஏது ? நான் ஏது ?
எளிதில் அடையமுடியாத -உன்னை
எப்படி அடைந்தேன் என்கிறார்கள் ?
"கண்ணீரை விலையாக கொடுத்து" என்றேன் !!!