பணமும் மனிதனும்
வேகமாய் செல்கிறான் மனிதன்
எங்கே செல்கிறான்?
நிற்க நேரமில்லை என்கிறான்
பம்பரமாய் சுற்றித் திரிகிறான்
என் இப்படி?
உறவை விட்டு செல்கிறான்
உணர்வாய் மறந்து ஓடுகிறான்
இயந்திரமாய் மாறிவிட்டான்
என் மாறினான்?
பணத்தை நினைத்தே மாறினான்
பணத்தை தேடிய பயணம்
அது எங்கே சென்று முடியும்?
பூவை மனக்கவும் நேரமில்லை
சிறு புன்னகை செய்யவும் நேரமில்லை
அழகிய சித்திரம் பார்க்கவும் நேரமில்லை
சித்தம் எதையும் நினைப்பதில்லை
பணம் ஒன்றை தவிர!
-கலைப்பிரியை