எல்லை
நிலத்தின் எல்லைக்குள் இரு- இல்லையேல்
.........நீரில் மூழ்கிவிடுவாய்
மலையின் உச்சியிலேயே இரு- இல்லையேல்
........மரணம் அதை தழுவுவாய்
விதிமுறைகளை பின்பற்று-இல்லையேல்
.......விபத்திற்கு உள்ளாவாய்
கட்டுப்பாடுகளில் கவனமாய் இரு -இல்லையேல்
.......கஷ்டத்தில் தவிப்பாய்
மொத்தத்தில்,
.......எல்லையின் எல்லையிலேயே இரு- இல்லையேல்
.......ஏளனம் அடைவாய்.
-கலைப்பிரியை