இதுதான் தமிழகம்
இதுதான் தமிழகம்
எல்லாம் இருந்தும்
எல்லாம் இழந்து
ஏங்கி நிற்பதுதான் தமிழகம்
வீரம் விளைந்த மண்ணில்
கோழைகளின் ஆட்சியால்
கோமணத்தை காக்க போராடுவதுதான்
தமிழகம்
கீழடியின் உண்மைகள்
சொல்லும் நம் பெருமைகள்
அதை மறைப்பவர்களை
தட்டி கேட்க வக்கற்ற நிலையில்தான்
தமிழகம்
மலையை குடைந்து
நியூட்ரினோ எடுத்து
மண்ணை குடைந்து
மீத்தேன் எடுத்து
ஸ்டெர்லைட் வடிவில்
மக்களை அழித்து
பாலைவனமாக்கி வரும்
கானல் நீரில்
தாமரை மலர துடிப்பதுதான்
தமிழகம்
பள்ளி மருத்துவமனை
யாவும் தனியாருக்கு தந்து
சாராயம் விற்ற பணத்தில்
தாலிக்கு தங்கம் தந்து
பல பேரின் தாலியை
அரசே அறுப்பதுதான் தமிழகம்
SCHEME என்ற வார்த்தைக்கு கூட
அர்த்தம் தெரியாத
முட்டாள் மத்திய அரசை நம்பி
ஏமார்ந்து நிற்பதுதான் தமிழகம்
மணலை திருடவும்
விவசாயத்தை அழிக்கவும்
நிலங்களை மலடாக்கி
எரிவாயு எடுக்கவும்
இன்னும் அரசியலுக்காக
தானாய் வரும் காவிரியை
தடுத்து அரசியலாக்குவதை பார்த்தும்
தட்டி கேட்க துப்பற்று நிற்கும்
பேடிகள் இருப்பது தான் தமிழகம்
பெட்ரோல் விலை நிர்ணயம்
நீட் தேர்வு
ஜிஎஸ்டி
பணபதிப்பிழப்பு
எல்லாம் உடனடியாக அமலுக்கு வந்தும்
காவிரியை பெற்றுத்தர
துப்பற்றவர்களை சுமப்பதுதான்
தமிழகம்
இயற்கை கருவில் சுமக்கும்
கனிம வளங்களை
பன்னாட்டு நிறுவனங்கள்
சுரண்டி கொள்ளையடிக்க
பாதையமைத்து அதற்கும்
நம்மிடமே சுங்ககட்டணம்
வாங்குவதுதான் தமிழகம்
விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி
விமான நிலையம் அமைத்து
பணக்காரர்களின் சொகுசிற்கு
மக்களை நடுத்தெருவில்
நிற்க வைப்பதுதான் தமிழகம்
மாட்டிற்காய் போராடி
ஜல்லிகட்டை மீட்டெடுத்த
உண்மை வீரர்கள்
காவிரி மறுப்பு, ஸடெர்லைட்,
நீயூட்ரினோவென
பல பேரழுவு தெரிந்தும்
கண்விழித்தும்
உறங்கி கொண்டிருப்பதுதான் தமிழகம்
திறமையற்ற ஆளுமை
ஆளுமையற்ற அரசு
அரசு நடத்த தெரியாத அரசியல்
அரசியலின் அர்த்தம் தெரியாத அரசியல்வாதிகள்
அஞ்சுக்கும் பத்துக்கும் வாக்களித்து
செத்து பிழைக்கும் மக்கள்
எல்லாம் சாதகம் என்று
கொள்ளையடிக்கும் கூட்டம்
கூட்டத்திற்கு துணைபோகும் அரசு
இதுதான் தமிழகம்
முப்போகம் விளைந்த மண்ணில்
கஞ்சிக்கு வக்கற்று
உயிரை விடுவதுதான் தமிழகம்
கட்சி கொடிகளை காற்றில் பறக்க விட
ஏழைகளின் கோமணத்தை
உறுவி எடுத்துகொண்டிருப்பதுதான் தமிழகம்
இப்படியே வேடிக்கை பார்த்து கொண்டே
நாளை பாலைவனமான பின்
ஒட்டகம் மேய்க்க காத்து கொண்டிருப்பதுதான் தமிழகம்
எல்லாம் அறிந்தும்
எதையும் கண்டும் காணாமல்
ஒன்பது துவாரத்தையும்
பொத்திகொண்டிருப்பதுதான் தமிழகம்
இதுதான் தமிழகம்
எல்லாம் இருந்தும்
யாவையும் இழந்து கொண்டே
ஏங்கி நிற்பதுதான் என் தமிழகம்
ஆதங்கமும் பதிவும்
ந.சத்யா