பணி நிறைவு பாராட்டு விழா கவிதை மடல்

#பணி_நிறைவு_பாராட்டு_விழா
02.04.18 அன்று மாவட்ட மைய நூலகத்தில் இருந்து பணி நிறைவு பெற்ற என்_மாமா அவர்களுக்கு எழுதிய ஒரு சில வரிகள். இதோ என் எண்ணோட்டத்தினை எழுத்துகளின் வாயிலாக.......

எளிமை, நேர்மை, உண்மை
இவை வெறும் வார்த்தைகள் அன்று - நீர்
வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை நெறிகள்.!!!

பணிகள் செய்ய நீ சளைத்ததும் இல்லை
என்றும் களைத்ததும் இல்லை
தெரியாத ஒன்றை அறிய முயல்வீர்!
தெரிந்த ஒன்றை பிறருக்கு புரிய வைக்க முயல்வீர்!!

வேலையின் இடைவேளையில்
அவசர‍அவசரமாய் தலைப்புச் செய்திகளை
வாசித்ததுண்டு - இனிமேல்
அந்த ஓட்டம் வேண்டாம் - ஆம்
அடி முதல் நுனி வரை
ஒவ்வொரு வார்த்தைகளாகவும்
வண்ணப் படங்களின் வாயிலாகவும்
நுண்ணறிந்து ‍செய்திகளை வாசிப்பது மட்டுமல்ல
இனி தாள்களை சுவாசிக்கவும் செய்வாயே...!!!

உங்களிடம் சற்றே வேகம் குறைவு - ஆம்
மறுப்பதற்கு அன்று
பேச்சில் மட்டுமே தவிர செயலில் அன்று..!!

12 வயதில் என்னை
நூலகத்தின் வாயிலில் ஏறவைத்திரே!!
உமக்கு வெறும் சாப்பாடு கொடுப்பதற்காக அல்ல
என்னை சாதிக்க தூண்டுவதற்காக அல்லவா!
முதலில் என் வாழ்க்கை என்னும் விளக்கை
ஏற்றி வைத்தவர் நீவிர் அன்றோ!

ஒவ்வொரு முறை நூலகத்தின்
வாயிலில் ஏறும்போது சற்றே
வியப்பு தோன்றும் - ஆம்
நூல்களை கற்பதா அல்லது
உம்மை கற்பதா என்று - இனி
அந்த வியப்புக்கு இடமில்லை
என்று கருதுகிறேன் - ஆம்
வெளியில் நூலகம்
வீட்டில் நுன் அகம் அல்லவா!

ஓயாத கடல் அலைகளுக்கு
ஓய்வு ஏது?
கையிலே சிக்காத காற்றிற்கு
ஓய்வு ஏது?
இரவு பகல் மாறுகின்ற
இயற்க்கைக்கு ஓய்வு ஏது?
இவற்றிக்கு ‍எல்லாம்
ஓய்வு என்றால் எவ்வளவு
ஆச்சரியமோ அதைவிட
ஆச்சரியம் உமக்கு ஓய்வு என்பது...

காலை 7.30 ம் மதியம் 1.30 ம்
பணி நேரம் என்று அஞ்சிட வேண்டாம்?
இனி அவை வெறும் மணி துளிகளே!!

உன் திறமையைக் கண்டு
வியந்து கொடுத்தார்கள்
பணி ஓய்வு - ஆம்
உன் சிறப்பான பணியை ஓரிடத்தில்
சிக்குண்டு கிடக்காமல் சிறகடித்து பறக்க
எண்ணி மனம் நிறைந்து கொடுத்தார்கள்
பணி நிறவைு என்ற பாசத்தால்......
என்றும் அன்புடன்
ம. சிவபாலகன்

எழுதியவர் : சிவபாலகன் (5-Apr-18, 1:06 am)
பார்வை : 39006

மேலே