எழுதுவோம்
இளைஞனே
கொஞ்சம் எழுத வா
அன்று செப்பேடுகளில்
சேமிக்கப்பட்டவர்கள்தான்
நீயும் நானும்
நம் ஓலைச்சுவடிகளை
உயர்த்திய பின்புதான்
உலகம் நம்மை உற்றுப்பார்த்தது
நீயும் உன் விரல்களை தீட்டு
கம்பனை கணினிக்குள் சேகரி
இன விடுதலைக்காய்
யாக்கையைத் திரியாக்கி
செங்கொடி மூட்டிய
செந்தழலை சேர்த்துக்கொள்
மூச்சடங்கும் முனகலிலும்
தமிழினம் முழங்கிய
முத்துக்குமாருக்கு
முதல் பத்தி வை
நம் வலிகளையெல்லாம் வரிகளாக்கு
ஆட்சியாளர்களோடு
அடித்தட்டு மக்களுக்கும்
அத்தியாயம் ஒதுக்கு
இளைஞனே
கொஞ்சம் எழுத வா
இணையத்தை உழுது
இனியேனும் எழுது.

