முடிவின் தொடக்கம்

பருத்தியின் முடிவில் உண்டானது ஆடை
தேனீயின் முடிவில் கிடைத்தது தேன்
மண்புழுவின் முடிவில் கிடைத்தது உரம்
மேகத்தின் முடிவில் கிடைத்தது மழை
படிப்பின் முடிவில் கிடைத்தது பட்டம்
ஆண்டின் முடிவில் கிடைத்தது புத்தாண்டு
ஷாஜகானின் முடிவில் கிடைத்தது தாஜ்மஹால்
பலரின் ரத்தத்தில் கிடைத்தது சுதந்திரம்
தோல்வியின் முடிவில் கிடைத்தது அனுபவம்
கல்லின் முடிவில் கிடைத்தது சிற்பம்
மரத்தின் முடிவில் கிடைத்தது வீடு
இங்கு,
முடிவெல்லாம் முடிவல்ல
அது இன்னொன்றின் தொடக்கம் .

-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (5-Apr-18, 11:37 am)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : mudivin thodakkam
பார்வை : 302

மேலே