காதலியின் கண்கள்

கண்ணோ! கருங்குயிலோ!
காலனின் இடமன்றோ!
கண்ணின் கருவிழியில் - என்னை
கட்டுண்டுக் கிடக்கச் செய்தன்றோ!
கண்நோக்கா பேசும் பெண்மானே!
புறநோக்கும் வேளையில் என‍ைநோக்கி
கண்சுருக்கி மகிழ்வதன்றோ!
விழிகள் ஒன்றோ - பார்க்கும்
விதங்கள் பலவோ!
விழிகள் ஒருசேரின் - அங்கே
வார்த்தைகள் தான் வாய்ப்பதன்றோ!
நிலவோ நிலவன்றி - உன்
முகமல்லவோ நிலவு....!

எழுதியவர் : சிவபாலகன் (5-Apr-18, 7:25 pm)
சேர்த்தது : சிவபாலகன்
பார்வை : 629

மேலே