முத்தச் சோலைவனம்...
அன்று என் கன்னம்
என்னும் பாலை வனத்தில் விழுந்ததே உன்
முத்தம் என்னும் முதல் துளி!..
அதன் ஈர சுகத்தில்
என்னுயிர் வெந்ததடா!
அந்த நெனப்பு
வந்து வந்து போனதடா!
என் நெஞ்சம்
கொஞ்சம் நொந்து போனதடா!
என்னை நோகடிக்காதே!
கொஞ்சம் கொஞ்சமாய்
சாகடிக்காதே!
துளியை வெல்லமாக்கிவிடு!
என் கன்னப் பாலைவனத்தை உன்
முத்தச்சோலைவனம் ஆக்கிவிடு!!...