அந்த மோக முள்

தாண்டி போகவில்லை
பேதையின் விழிகளை...?
உண்மையில்லை....
என் வாழ்வே நீ தான்
என உய்த்திடும்
சகமை நீ யென
நிறம் மாறாத கண்களை..
தீண்டி பார்த்திடவோ?
தேவையான உணர்வுகளென
அவள் வேண்டாமென
பொய்யாய் சொல்லிவிட்டு..
வேண்டுமென
தாகமும் தேகமும்
தாண்டி
அகம் துறுத்த்தி....
என் நிறங்களை
தொய்த்து சவைத்தாலும்
விடிவனின் நிறங்களில்
எல்லாம் வல்ல ஓர் வானவில்லாய்
வந்துதான் பிறக்கிறாள்
நான் துயிலாத
நிறங்களென...
என் செய்வது?
என் கனவுகளை...
நிஜமோ? நிழலோ?
பெண்மையே...
என் வழிதடத்திடல்
நீ வந்து சேர்ந்தது..
காற்றில் எழுதி
பறக்கவிடுகையில்
நெற்றியில் பிறை நிலவும்
கண்களில் காணாத
தமிழ் கவிதையும்
உதட்டின் மச்சமும்
இடப்புற கன்னத்தின்
குழிகளும்..இன்னோர் கன்னத்தில்
சொல்லவோல்லா காதலோடு
கீழிறங்கினால்
காதலாலும் காமத்திலும்
கணிதமறியாமல் முத்தமிடுகிறேன்
உன் மார்பில்
பொய்யில்லையடி...
எல்லாம் தாண்டிய
இடுப்பின் வரிகளும்..
மேல் இறங்கி போக
உன்னோடு எல்லாம் உண்டு
இதற்கும் மேல் மற்றோரோடு
என் சொல்ல
இழுத்து வந்து போராடுகிறது
பெண்மை அறியா?
புதுமையை நிதர்சனத்தில்
தீண்டி பார்த்திட
எவரும் அறியாமல்
இளமையை என் மெய்யினில்..
அந்த மோகமுள்ளை
அகற்றி கொண்டாடிட வா
என்னவளே!

எழுதியவர் : சுரேஷ் குமார் (11-Apr-18, 2:03 am)
Tanglish : antha moga mul
பார்வை : 166

மேலே