நாஞ்சில் ஓருமைகள் 4

நாஞ்சில் ஓருமைகள்.

அன்ணைக்கி பங்கனி உத்தரமா நம்மட இஷ்ட சாத்தாவுக்கு பாயசம் வெச்சு கும்பிட கேசனேரி பத்து போகையில அப்பா சாயந்திரம் சித்தூருக்கு போலான்னு சொன்னா..

வேனுல எல்லாருமா புறப்படுகையில ராவு யேழு மணி தாண்டீற்று.

முப்பந்திரம் எயக்கியம்மன் கிட்ட திருநாறு பூசி நாஞ்சி நாட்டை தாண்டிற்றோம்.

வள்ளியூர் சரஸ்வதி பவான் ஓட்டல்ல சாப்பிட்டுற்று சித்தூருக்கு போயி சேருகையில ராவு ஒம்பது மணி தாண்டியாச்சு.

நாம ஒறங்காம வன்னி குத்து பாக்கணம் ன்னு நான் என் சேக்காளிக்கு கூடால தண்ணியில்லாத்த நம்பியாத்து மணல்ல நடந்து சுத்திற்று உட்கோயிலு நடைய அடுப்பிச்சு வருகையில அம்ம கூப்பிட்டு எல்லா சாமியையும் கும்பிடணும் இனி வாரதுக்கு நாளாகும்லா ன்னு சொன்னா..

வில்லு பாட்டு பாடிற்று இருந்தேரு.

"வாருமய்யாஆஆ
வாருமய்யாஆஆ
வந்து இங்க ஆடுமய்யாஆஆ"

ஆங்காராமா வில்லடிச்சு விளிக்கேரு நம்மட பெரியப்பா வில்லிசை வேந்தர் கடுக்கரை K.O.தங்கப்பா.

கேட்டாலே ஆராசனை வராதவனுக்கும் ஆராசனை வரும்.

அங்கன பாத்தா வில்லு வாத்தியத்து மின்னுக்கு பத்து பதினஞ்சு பேரு ஆராசனை ஆடுகா ஜல்லு ஜல்லுன்னு கையில வேலு கம்பு வெச்சிற்று...

பக்கத்துல நான் மட்டும் போறேன்..சாமி ஆடுக ஆளுகள கண்டு அசராம... ஏன்னா நம்ம கொலுசு புள்ள அண்ணன் ஆடுகான்லா.

ஓரு அண்ணன் ஓடி வாரான்
"யேடே நீ தெச்சணை குடுத்திற்றியா ப்போ.. தெச்சணை குடுத்திற்று நீ நில்லுப்போ.. ஆராசனை வந்திற்றா கேக்க முடியாதுல்லா ங்கான்.

எனக்கொண்ணும் மனசிலாக மாட்டக்கு.
எதுக்கு ன்னு ஆலோசிக்கேன்.

இன்னொரு அண்ணன் சந்தன கொழம்ப எடுத்து யெம் மேல தேய்க்கான் .

ஆஹா நம்மள சாமி ஆட சொல்லுகானா..
அண்டம் கலங்கீற்று.

நான் அங்கன இருந்து வெளில வாரைல தான் அம்ம சொன்னா
சாமி ஆராசனை வருத்துகதுக்கு விரதம் இருந்த ஆளுகளுக்கு கூட்டத்தில நான் போயிற்றேன்னு

எழுதியவர் : (16-Apr-18, 6:30 pm)
பார்வை : 45
மேலே