கண்டியை ஆண்ட தமிழன்

இலங்கையில், மலை நாட்டில், கண்டி நகரம் கடல் மட்டத்துக்கு 1600 அடிகள் உயரத்தில் உள்ளது. இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை இந்த நகரத்தை தழுவிச் செல்கிறது. இந்த நகரத்தினை கொழும்பில் இருந்து A1 பெரும் பாதையில், 118 கி மீ பயணம் செய்து அடையலாம் .செழிப்பான மலை பகுதியில் உள்ள கண்டி இராச்சியத்தை கடைசியாக நாயக்கர் வம்சதை சேர்ந்த ஸ்ரீ விக்ரம இராஜசிங்கே என்ற தமிழன் ஆண்டான் . இவனது சொந்தப் பெயர் கண்ணுசாமி . இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன் .இவனது பூர்வீகம் தஞ்சாவூர். சந்தர்ப்ப வசத்தால் கண்டிராச்சியத்துக்கு 18 வயதில் மன்னனானான். கண்டிப் பேரரசு உருவான பின்னர் சேன சம்மத முதல் ஸ்ரீ விக்கரம ராஜசிங்க வரை ஒன்பது சிங்கள மன்னர்களும் நான்கு நாயக்கர் மன்னர்களும் ஆண்டனர்

ஸ்ரீ விக்கரம ராஜசிங்க தமிழ்பேசும் தெலுங்கர் நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர் . தந்தை வேங்கடப் பெருமாள் விஜயநகரப் பேரரசின் மூன்றாம் வேங்கட மன்னன் பரம்பரையில் வந்தவர். தாயார் பெயர் சுப்பம்மாள். இவர்களுக்கு இருவர் பெண்பிள்ளைகள். ஸ்ரீ விக்கிரம சிங்க மட்டுமே ஒரேயொரு ஆண் வாரிசு. பெற்றோர் சூட்டிய பெயர் கண்ணுச்சாமி. வேங்கடப் பெருமாள் இராமேஸ்வரத்துக்கு குடிபெயர்ந்து வந்து அங்குள்ள பெரிய கோவிலில் வேலைசெய்தார். சிறிது காலத்தில் வேங்கடப் பெருமாள் இறந்ததும் இராமேஸ்வரத்தில் இருந்த தங்கை சுப்பம்மாளையும் கண்ணுசாமியையும் கண்டி பட்டத்துராணி கண்டிக்கு வரவழைத்தாள். சுப்பம்மாளையும் மகனையும் ஏனைய உறவினர்களுடன் கண்டி மலபார் வீதியில் தங்கவிடாமல் பேராதனைப் பூங்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் மன்னர் உல்லாசமாகப் பொழுதைப் போக்குவதற்கு கட்டியிருந்த விடுதியிலேயே இவர்களைத் தங்க வைத்தாள். ஒரு நாள் தாயும் மகனும் கிரா சுற்றி பார்த்த சமயம் தண்ணீர் குடிக்க தாகம் எடுத்ததால் ஒரு கண்டி கிராமவாசியின் உதவியை நாடியபோது அவன் சுப்பம்மாளின் அழகை கண்டு பிரமித்து தன் அதிகாரி பிலிமத்தலாவிடம் சுப்பம்மாளையும் , அழகான தோற்றமுள்ள மகனையும் கூட்டிச் சென்றான் . அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்து சென்று உணவும் தண்ணீரும் கொடுத் விபரம் கேட்டார் பிலிமத்தலாவ. அதுவே பிலிமத்தலாவோடு கண்ணசாமியின் முதல் சந்திப்பு . அப்போதே கண்ணசாமியின் அரச களையுள்ள தோற்றம் அதிகாரி பிலிமத்தலவாவை கவர்ந்தது. அந்த சிறுவனை கண்டி இராச்சியதுக்கு மன்னனாக்கி தன் இஷ்டப்படி நடத்த முடிவெடுத்தார் பிலிமத்தலாவ. அவரின் நோக்கம் தான் கண்டி மன்னனாவதே. சிறுவர்களுக்கே உரிய துடிதுடிப்புடன் காணப்பட்ட கண்ணுசாமியை மல்வத்த தேரரிடம் அனுப்பி சிங்களமும் தமிழும் பௌத்தமும் ஏனைய வித்தைகளையும் ராணி படிக்க வைத்தாள்.

ஏழு வயதில் கண்டிக்கு வந்த கண்ணுசாமி மகாராணிக்கு தத்துப்பிள்ளையாகி 17 வயதில் கண்டியின் அரசுரிமையை ஏற்றான்.அரசாண்டான். .ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க 1798 இல் மன்னனாக முடிசூடிக்கொண்டபோது அந்த கார் இருளில் ஒளிவெள்ளம் பாய்ச்சிப் புறப்பட்ட அக்கினிப் பிழம்பு என அன்றிருந்த சிங்களப் புலவர்கள் வாழ்த்திப் பூரித்தனர். மக்கள்பெருமைப்படக்கூடிய அளவுக்கு சிவந்த நிற மேனியும் ஆறடி உயரமும் கொண்டு திடகாத்திரமான ஆணழகனாக அரச கட்டில் ஏறினான்.இவனுக்கு முன் .நான்கு நாயக்கர் மன்னர்கள் ஆண்டார்கள் . முன்பு மலபார் வீதி என்ற பெயரில் கண்டி தலதா மாளிகைகைக்கு அருகே ஒரு தெரு இருந்தது. இப்பொது இலங்கையின் முதல் பிரதம மாந்திரி டி எஸ் சென்னயகவின் பெயரில் மாற்றப் பட்டது இத்தெருவில் வாழ்ந்தவர்கள் மன்னரின் இனத்தவர்கள் கண்டியின் முதல் நாயக்க மன்னன் விஜயராஜசிங்கன், மதுரையை ஆண்ட பங்கார நாயக்கனின் தம்பி நரேனப்பனின் மகளை திருமணம் செய்துகொண்டான். இத் திருமணத்தின் பின், பட்டத்து ராணியின் தந்தை நரேனப்பன், சித்தப்பா ராமகிருஷ்ணப்பன் மற்றும் பரிவாரங்கள் கண்டியிலேயே குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய தெருதான் குமரப்பா தெரு. அந்தத் தெருவில் நாயக்கர் குடும்பங்களே வசித்து வந்தன. இன்று அந்தத் தெரு மலபார் தெரு என்று அழைக்கப்படுகிறது. அதன் பின் விடுதலைப் புலிகள் தலதா மாளிகையை தாக்கியபின் இந்தப் பாதை மூடப்ப்டடது
****
பிரித்தானியர் 1815 கண்டியை கைப்பற்றிய பின் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டு வேலூரில் 53 வயது வரை வாழ்ந்தார். கண்டியில் புத்தரின் பல் உள்ள தலதா மாளிகை இருகிறதது. கி பி 1357–1374இல மூன்றம் விக்கிரமபாகு மன்னனால் கண்டி நகரம் உருவாகப்பட்டது என்கிறது வரலாறு.
கண்டிக்கு பெயர் வந்ததுக்கு பல விளக்கங்கள் உண்டு கண்டியின் ஆரம்பப் பெயர் கட்டுபுளு நுவர . “கடு” என்பது சிங்களத்தில் முள்ளாகும் ஒரு காலத்தில் கண்டி நகரம் முழுவதும் ,முற் காடாக இருந்தது. இன்றும் கண்டிக்கு அருகே கடுகஸ்தொட்ட என்ற பெயரில்; ஒரு பகுதி உள்ளது . அதாவது முள்மரங்கள் உள்ள தோட்டம் என்பது அர்த்தம். இந்த இடத்தை மஹாவலி நதி தழுவிச் செல்கிறது .
கண்டியின் சரித்திரப் பெயர் செங்கடகல ( Senkadgala) செங்கடகலபுர அதன் முழு பெயர் செங்கடகல ஸ்ரீதர்தானா மகா நுவர
. அதன் அர்த்தம் பிரகாசமாக வளரும் பெரும் நகரமாகும் . இந்த செங்கடகல பெயர் அந்த பகுதியில் இருந்து குகைக்குள் இருந்து தியானம் செய்த “செங்கந்த” என்ற பிரமாண சாதுவின் பெயரில் இருந்து வந்தது என்கிறது மரபு வழிக் கதை . இந்த செங்கடகல பெயர் நகரத்தை உருவாகிய மூன்றம் விக்ரமபாகுவின் மனவி பெயர் “செங்கந்த” என்பதாகும். இதை விட இன்னொரு விளக்கமும் உண்டு இந்த பகுதியில் ஒரு காலத்தில் செந்தநிறக் கல் இருந்ததனால் இப்பெயர் வந்தது என்பர். கந்த என்பது சிங்களத்தில் மலையாகும் உட என்பது மேல் ஆகும் . ஆகவே கந்தஉட என்பது மலை மேல் உள்ள பகுதி காலப் போக்கில் மருவி கண்டியாகி இருக்கலாம். எது எவ்வாறு இவரு இருப்பின் தேயிலை தோட்டம் முதன் முதலாக கண்டில் இருந்து கலஹாவுக்கு போகும் பாதையில் கண்டியில் இருந்து 37 கிமீ தூரத்தில் உள்ள லுலேகொன்துற (Loolecondera) என்ற கிராமத்தில் 1867 ஆண்டில் , 19 ஏக்கர் நிலத்தில், 17 வயது ஜேம்ஸ டைய்லர் (James Taylor) என்ற ஸ்காட்லாந்து நாட்டவரால் ஆரம்பிக்கப் பட்டது . அதன் பின் பல தேயிலை தோட்டங்கள் தோன்றின
தமிழ் நாட்டில் இருந்து கூலிகளாக குறைந்த சம்பளத்தில் தெயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய முதன் முதலாக பிரித்தானியர்களால் 1828 இல் கொண்டு வரப்பட்டனர். அவர்களே இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பினர் .கண்டி ஏசல பெரஹெரா விழாவில் பத்தினி தெய்வம் கண்ணகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது கண்டி அருகே பேராதனை பூந்தொட்டமும் பல்கலைகழகமும் உண்டு கண்டியில் இருந்து 43 கி மீ தூரத்தில் உள்ள நாவலபிட்டியாவில் தமிழ் நாட்டின் முன்னைய முதல் அமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன் பிறந்தார்

***

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (17-Apr-18, 5:17 am)
பார்வை : 334

மேலே