வெண்ணிலவே
வெண்ணிலவே
வா வெளியே!
இருள்கொண்ட வானத்திலே
ஒளிவீசும் தாரகையே!
காற்றில்வீசும் ரோஜாவின் வாசனையே
கடவுளின் கைவண்ணமே
உயிருக்குள் எங்கெங்கும் உன்பாதம்
சுண்டுவிரல் பட்டாலே செழிப்பேனே
வான்வரையில் உன்னழகை வரைவேனே
யாருமில்லா நேரத்திலே
உன்குரல் கேட்டேனே
ஏழேலு ஜென்மத்திலே
உந்தன் இதயத்திலே!
சின்னஞ்சிறு காற்றாய் நானிருப்பேனே!!
என்னிமைகள் மூடும்வரை
என்னிதயம் நிற்கும்வரை-உன்
முகத்தை நான் ரசிப்பேனே!!
காதல் கரையொதிங்கி
இதயத்தின் இடையில்
தொலைந்து போன வாழ்க்கை!!
பெண்ணே நீ சொல்...
இதுதான் உயிர்காதலா??
"அழகே நீதான் எனக்கு"
காதலன் சொல்லும் ஒருவரிக்கவிதை!!!