தளிர்க்க மறுக்கும் செடி
காதலைச் சொல்ல
உனக்கு வார்த்தைகள்
கிடைக்கவில்லை என்பதை
உன் மௌனம் சொல்கிறது.
ஒற்றைப் பார்வையால்
உணர்த்திவிடு!
சாலையின் அந்தப் பக்கம் நீ
சாலையின் இந்தப் பக்கம் நான்
யார் சாலையை கடப்பது?
சிக்கித் தவிக்கிறது
என் காதல் வாகன
நெரிசல்களில்!
கல்லெறிந்து கனியை
பறிக்க எண்ணவில்லை
தினமும் பார்த்து பார்த்து
பின் பழுத்ததும் பறிக்க
எண்ணுகிறேன்
தோட்டத்தின் உரிமைக்காரியோ
தடை போடுகிறாள்!
நான் வாசிக்கும் கவிதையை
நான் இசைக்கும் இசையை
கேட்க மறுக்கின்றாய்!
தண்ணீர் ஊற்றினாலும்
தளிர்க்க மறுக்கின்ற செடி நீ!