விருப்ப மனு
பெண்ணே..! என்
விருப்ப மனுவினை
உன்னிடம் அளிக்கிறேன்..!
ஏற்றுக் கொள்வதும்
நிராகரிப்பதும் - உன்
விருப்பம் என்பதனை
நானறிவேன்..!
எதுவாகினும் விரைந்து
முடிவெடு..
தேதி குறிப்பிடாமல்
ஒத்தி வைத்து விடாதே..!
தேதி குறிப்பிடாமல்
ஒத்தி வைப்பதற்கு இது ஒன்றும்
வழக்கு அல்ல - என்
வாழ்க்கை..!!