சொர்க்கம்

அது ஒரு மாலைப்பொழுது...கதிரவன் போக வேண்டிய நேரமானாலும், போகாமல் பிடிவாதம் பிடித்துகொண்டு இருந்தது...மணி ஒரு 5 லிருந்து 6.30 குள்ளாக இருக்கும்..மேற்கு திசை கதிரவனின் பளிச்சிடும் மாலை நேர வெப்பம் ..ராமின் முகத்தில் மெலானின் திரவத்தை சுரக்க செய்து கொண்டு இருந்தது...

அந்த ஒளி தன் உடலில் வெப்பத்தை அதிகமாக்கியது...இதை அனைத்தையும் பொருட் படுத்தாமல் ஒரு ஆழ்ந்த சிந்தனையில், பிளாட்டாக மாற்றப்பட்ட ஒரு விவசாய நிலத்தில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தான்...ராம்...

முன்பு தன் சிறுவயதிலேயே இது போல் இல்லயே, ஏன் இப்போது மட்டும் இவ்வளவு வறட்சி, மழை சரியான காலங்களில் பெய்ய மறுக்கிறது...அப்படியே, காலம் தாழ்த்தி பெய்தாலும் போதிய அளவு பெய்ய மறுக்கிறது..நெடும் வறட்சியை தாங்கும் பணை மரம் கூட பட்டு போய் நிற்கிறது...

பசுமை போர்த்திய வயல் வெளிகள் கட்டந்தரையாக காட்சி அளிக்கிறது... நந்த வனம் பாலை வனமாக மாறிவிட்டது...
இந்த பாலைவனம் கூட என் வர போகும் சந்ததியினருக்கு புலப்படுமா என்பது சந்தேகமே... இதற்கெல்லாம் காரணம் சாகுபடிக்கு தண்ணீர் தராத அண்டை மாநில அரசு மட்டுமில்லை..நமது அரசும், நாம் ஒவ்வொரு தனி மனிதனும் காரணம் தான் இந்த மாற்றத்திற்கு..என்று தீர்க்கமாக யோசனையில் மூழ்கி இருந்தான்..

ராம் ஒரு பொறியியல் பட்டதாரி..படித்து பட்டம் வாங்கி இரண்டு வருடமாயிற்று, சரியான தகுதிக்கேற்ற வேலை இல்லை.. என்றாலும் படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்க ஒரு சி.என்.சி ஆபரேட்டர் வேலை 12 மணி நேரம் வேலை பார்த்தான்..மனம் ஒத்து உழைத்தாலும், உடல் பளுவை, வெப்பத்தை தாங்க முடியவில்லை.. வயிற்றில் அல்சர், வாயில் கொப்பளம் என்ற தொல்லை..பொறுத்துக்கொள்ள முடியாததால் 6 மாதத்திற்கு மேல் இருப்பு கொள்ள வில்லை..வீட்டிற்கு வந்து இத்துடன் 1 வருடமயிற்று இன்னும் புதிய வேலையை தேடிய பாடில்லை..

சாப்பிடுவது, தூங்குவது, ஊர் சுற்றுவது என ஒரு தொடர் பழக்கம் ராமை சுழற்றி கொண்டே இருந்தது...அப்போது இயற்கையை பற்றியும், சுற்று சூழலை பற்றியுமான ஒரு கவலை ராமை ஆட் கொண்டது...நம்மால் ஏதாவது இந்த சமூகத்திற்கு செய்ய முடியுமா என்று ஒரு
யோசித்து கொண்டு இருந்தான்...

எங்கே நம் குடும்பத்திற்கு தேவையான ஒன்றையே நம்மால் செய்ய முடியவில்லை. எங்கே நாம் இந்த சமூகத்திற்கு செய்வது என்று ஒரு கணம் யோசித்தான்...

ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தான்...எல்லோரிடமும் தன் யோசனையை கூறினான்..."பைத்தியமா
படிசிருக்க ஒழுங்கா உடம்ப பாத்துட்டு ஒழுங்கா வேலைக்கு போற வழிய பாரு"..

"டேய், என்னடா ஒழுங்கான முறைல வேலைக்கோ, வெளி நாடுக்கோ போய் பொழப்ப பாரு.."

உன் அப்பா,அம்மா வா நல்லா பார்க்கிற அளவுக்கு சம்பாரி, அப்புறம் உன் விருப்பத் த, நிறைவேற்றிக் கோ, என பல்வேறு பேச்சுக்கள் அவனை மட்டம் தாழ்த்தின..
ராம் தன் அப்பா, அம்மாவிடம் சொன்னான், "ஐயா, என்னால நீ கேட்ட படிப்ப படிக்க வச்சிட்டன், நீ எங்கள கடைசி காலத்திலேயே வேலைக்கு போக விட்ட ராத, என அப்பா சொன்னார்..அம்மா அடுப்படியில் அமைதியாய் எதும் சொல்லாமல் இருந்தார்...

அவன் மற்றவர்கள் சொன்னது எதையும் பொருட்படுத்தவில்லை...அப்பா சொன்னது ஒரு வலியையும், ஒரு வித வலிமையையும் ஏற்படுத்தின..அவனுடைய முடிவு ஒரு காட்டை உருவாக்குவதும், விவசாயம் பார்ப்பதும் தான்..விவசாயம் கூட பரவா இல்லை..காடு தான் என ஏளனமாக அனைவரும் சிரித்தனர்..அவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

அவனுடைய பூர்வீக சொத்து ஒரு 10 ஏக்கர் மலையை ஒட்டிய பகுதி, ஒரு சிறிய மலை அதன் மேற்கு புறத்தில் உள்ளது...அப்பாவின் அனுமதியோடு அந்த இடத்தை வறண்ட பூமியை பெற்று கொண்டான்..அதன் பக்கத்தில் 2 ஏக்கர் வயல் வெளியும் உள்ளது. சமூக சூழியல் ஆர்வலர்கள், விவசாயம்,காடு வளர்ப்பு போன்ற பல்வேறு விசயங்களை இணைய தளம் முதலியவற்றை பயன் படுத்தி தெரிந்து கொண்டான்... பியூஸ் மனுஷ்,அணில் மற்றும் பமீலா மல்ஹோத்ரா போன்றவர்கள் காடு வளர்த்து சாதித்து காட்டியவர்கள்..அவர்களை பற்றியும் அறிந்து கொண்டான்.. தன் ஊர் பெரியவர்கள், வயதானவர்கள் போன்றோரை கலந்து ஆலோசனை செய்தான்..

வறட்சியை தாங்கும் மரங்கள், மூங்கில்கள் பலவற்றை நட்டான்..தண்ணீர் போதிய அளவு இல்லை..சில மரங்கள் பிழைத்தது..ஊரில் பெரும்பாலோனோர் சிரித்தனர்..நாங்க தான் சொன்னோம் காடும் வளர்க்க முடியாது மயிரும் வளர்க்க முடியாதுனு..ஒழுங்கா படிச்ச படிப்புக்கு போய் வேலய பாரு..ஆனால், அவன் யார் சொல்லியதையும் பெரும் பொருட்டாக மதிக்கவில்லை..பேசுபவர்கள் பேசி கொண்டே தான் இருப்பார்கள் என நினைத்து கொண்டான்...

அப்பா, அம்மாவை நித்தம் பொழுதும் நினைத்து கொண்டான்...ஆறு மாதங்கள் கழித்து, ஒரு சில மரங்களை தவிர மற்றவைகள் நன்றாகவே வளர்ந்தன...
தென்மேற்கு பருவமழை பற்றிய அறிவிப்பு வந்ததும், அதை எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தவன் போல 15 ஏக்கர் முழுதும் ஒரு 20 சிறு குட்டைகளை வெட்டினான்..மேலும், புது புது மரக்கன்றுகளை நட்டான்..மாதங்கள் கழிந்தன..செலவு ஆட்கூலி,குட்டை வெட்ட போன்ற செலவுக்காக தன் டிகிரியை வைத்து லோன் வாங்கி கொண்டான்...

மழை எதிர் பார்த்தது போல இல்லை...இருந்தாலும் குட்டைகள் பாதி அளவு நிரம்பின..இருந்தாலும் பல மரங்கள் நன்றாகவே துளிர் விட்டன...
தேங்கிய குட்டை நீரை வைத்து 2 ஏக்கர் வயலில் நாட்டு வகை தானியம், நெல் போன்றவற்றை பயிர் செய்தான்...குட்டை நீர் அதுக்கு போதுமானதாக இருந்தது..அது எதிர் பாரத விதமாக வறட்சியையும் தாங்கி நின்றது..வருடம் 1 நெருங்கியது.. மூங்கில்கள் சிறுகால மரங்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்தது..
மூங்கில்கள் சிலவற்றை வெட்டி பிரம்புதொட்டில், சேர் போன்றவை செய்ய ஏற்றுமதி செய்தான்..அதன் மூலம் ஒரு நல்ல லாபம் எடுத்தான்..வருடம் ஒன்றரை ஆனது நெல் மற்றும் சிறு தானிய அறுவடை அது அவனுக்கு ஒரு போதிய அளவு லாப தொகையை தந்தது..அதன் மூலம் லோனை பாதி அளவு கட்டினான்..

அப்பாவிற்கும், அம்மாவிற்கும் அளவற்ற மகிழ்ச்சி..ஊரில் பேசிய வாய்கள் பலவும் இப்போது ராமை பார்த்து புன்முறுவல்
பூத்தன..இவனை எளனம் செய்த நண்பர்கள் ராமிற்கு உதவி செய்தனர்..

காலங்கள் ஓடோடி கொண்டே இருந்தது...இப்போது காடு உருவானது ஒரு பல் உயிர் வாழும் இருப்பிடம் ஆனது..
பல்வேறு மரங்கள்,
,மூங்கில்கள் ,செடிகள்,கொடிகள் பலவற்றை கொண்டதாய் மாற்றினான்..
ஒரு சில காய்கறிகள் போன்றவற்றையும் பயிர் செய்தான்..அதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஒரு நல்ல லாபம் ஈட்டினான்..ஒரு முழுமையான பிரபாண்டமான ஒரு காடு தனி மனிதன் உருவாக்கிய காடு..

அப்பாவையும் ,அம்மாவையும் ஒரு இயற்கை குடில் ஒன்றை அமைத்து காட்டிலே வாழ்ந்தான்..குட்டைகள் பெரும்பாலும் இப்போது நிரம்பின...ராமின் காட்டினால் அவ்வபோது மழையும் பொய்த்தது.. குட்டையில் இருந்து பைப் லைன் மூலம் நிலத்திற்கும்,வயலுக்கும் தேவையான நீரை அவ்வபோது பெற்றுகொண்டான் ராம்..

குட்டைகளில் விரால், கெண்டை போன்ற மீன்களையும் வளர்த்தான்..அதும் ஒரு நல்ல லாபம் தந்தது.. நாட்டு வகை நெல் மற்றும் தானியங்கள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்க பட்டது இதனை அறிந்தும் பல பேர் நேரில் வந்து வாங்கி சென்றனர்..

எங்கே பார்த்தாலும் பசுமை, மண் வாசம்
என ஒரு சொர்க்கமாக அது மாறியது..பல்வேறு பறவைகள் அணில் மற்றும் சிறு விலங்குகள் பல்வேறு நுண் உயிர்களின் இருப்பிடமாக ராமின் காடு அமைந்தது...

நண்பர்கள் சிலரின் முக நூல், டிவிட்டர் பதிவினால் இந்த காடு மற்றும் ராம் அனைவரும் டிரெண்டிங் ஆகினர்...அனைவரும் தேடப்படும் இடமாகவும் மாறியது...

பல்வேறு ஊரிலேந்தும், மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பலர் இதனை பார்க்க நேரில் வந்தனர்...இதையும் புத்தி சாலி தனமாக பயன்படுத்தி கொண்ட ராம் பார்வையிட குறிப்பிட்ட தொகையும் அறிவித்தான்...மேலும், காட்டிற்கு உள்ளே செல்பவர்கள் பிளாஸ்டிக், வாட்டர் பாட்டில் போன்றவற்றை எடுத்து செல்ல தடை விதித் தான்..இதன் மூலம் ஒரு கணிசமான தொகை கிடைத்தது...அதை பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தினான்..

வருடங்கள் உருண்டோடியது..இப்போது ராம் ஒரு இளம் தொழிலதிபர்... அவனுடைய காடு அவனை உயர்த்தியது..
மரங்கள் மற்றும் மூங்கில்கள் இவற்றால் வரும் லாபம், நெல் மற்றும் சிறுதானியம்,
காய்கறிகள்,மீன் வளர்ப்பு ராமிற்கு நல்ல லாபத்தை தந்தன...

மேலும்,சுற்றுலா பயணிகளின் பார்வை கட்டணம்.. இப்போது உள்ளே ஒரு இயற்கை உணவகம் மண் சட்டியில் செய்த உணவுகள்,பானங்கள், கூழ் போன்றவை வாழை இலையில் பரிமாறப்பட்டது..இதை அப்பா மேற்பார்வையில் இயங்குகிறது..
அதுவும், அவரது விருப்பத்தின் பெயரால்..

இப்போது ராமுக்கு வயிற்று புண், வாயில் கொப்பளம் இல்லை..அப்பா இப்போது கவலை படுவதில்லை..அவனுடைய காடு அவனுக்கு கதிரவனின் வெப்பத்தை குறைத்து கொடுத்தது..நல்ல காற்று, அவ்வபோது மழை..நல்ல மண் மணம்..
குயில்களின் இன்னிசை..என கொடுத்து அவனுடைய வாழ்விற்கு தேவையான பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் கொடுத்தது அவனுடைய காடு...அதுக்கு அவன் ஒரு பெயர் இட்டான் அதுவும் அது வறட்சியாக இருக்கும் போதே..."சொர்க்கம்"...

-முகம்மது முஃபாரிஸ். மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (22-Apr-18, 5:11 pm)
Tanglish : sorkkam
பார்வை : 320

மேலே