நிராகரிப்பு
என்னை விட்டு சென்றவர்களுக்கு
சொல்லுகிறேன் கேளுங்கள்
என்னிடம் உள்ள உலகத்தை
உங்களுக்கு நான்
தந்திருப்பேன்
அல்லது
தவித்துயிருப்பேன்
என்னை நீங்கள் ஒரு சிறு துகள் என்று நினைத்தால்
கடல்கரை செல்கையில்
நானும் வருவேன் உங்கள் கால்களில் இடையில்
இவன் ஒளி இல்லாத ஆள் என்று நினைத்தால்
நான் வருவேன்
உங்கள் நிழல் போல
இவன் தவறு மட்டும் செய்தவன் என்று நினைத்தால்
நான் வருவேன்
நீங்கள் நல்லது செய்வதை பார்க்க
இவன் மனித குணம் இல்லை என்று சொன்னால்
நான் வருவேன்
எனக்கு மனிதன் தேவையில்லை என்று சொல்வதற்கு