மரங்களை பாதுகாப்போம்

மரங்களை பாதுகாப்போம்




மரம் வளர்ப்பது தான் இல்லையே அட மனிதா...!
இருக்கும் மரத்தையாவது பாதுகாப்பாயா...?

மரத்தை வெட்டி விற்றவன் ஏசி அறையில் நிம்மதியாய் குளிர்காய்கிறான்...

கூலிக்காக மரம் வெட்டியவன் குடிக்க நீரின்றியும் சுவாசிக்க நல்ல காற்றின்றியும் கரைகிறான்...

மரத்தை விட்டு பணம் போதுமென்று நினைத்தவன் மழையின்றி பயிருடன் தானும் மடிந்துவிடுகிறான்...

மரத்தை வெட்டுகையில் எனக்கென்ன என்று நின்றவன் நிற்க நிழலின்றி கருகுகிறான்...

மரம் வெட்ட அனுமதி கொடுத்தவன் மனித உயிரை உறிஞ்சி மரக்கன்று நடுவது போல படம் எடுக்கிறான்...


- த.சுரேஷ்.

எழுதியவர் : சுரேஷ் (23-Apr-18, 11:30 am)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 1079

மேலே