நம்பிக்கை

நம்பிக்கைதான் வாழ்க்கை
யாரோ சொன்னார்கள்
அவனைக் கண்டதும்
என்னவனாய் நினைத்தேன்
காதல் கொண்டேன்
அவனுக்கு என் மீது
வெறும் மோகம்தான்
வெறும் காமக்கிழத்தியாய்
என்னை நினைத்தான்
என்றறிந்த பின்னே
என் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்
' நம்பினார் கெடுவதில்லை நான்குமுறை தீர்ப்பு'
என்று யாரோ கூறியது நினைவுக்கு வர
இப்போது'அவன்' மீது வைத்துள்ளேன்
நம்பிக்கை,. வாழ்க்கையில் நல்லதோர்
துணைவன் கிட்டிட .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-18, 12:18 pm)
Tanglish : nambikkai
பார்வை : 129

மேலே