காதல் பரிசு

பல் துலக்கும்போது
துவங்கிய கற்பனைகள் ..

பஞ்சணை வரை
பஞ்சமில்லா நினைவுகள் ..

சுட்டெரிக்கிறது மேனியில்
சூரியகாந்தி இதழ்கள் ...

குளிரூட்டும் வரிகள்
கதிரவனால் காய்ச்சல்..

காலிக்குடம் இடுப்பில்
காயாத விறகு அடுப்பில் ..

அம்மா கேலியாய் சிரிக்க
அக்கம்பக்கம் பல்காட்டி இளிக்க..

அடிமனதில் அசையாது
அவன் நினைவுகள் தான் ...

சாமக் கும்மிருட்டில்
சாமக்கள்வன் வருவான் ...

குமரியென மறந்து -அவன்முன்
குழந்தையாய் நெளிவேன் ..

காமக்கதைகள் பல
காதில் ஓதிவிட்டுச் செல்வான்..

விடிந்தால் காணாமல் போய்- என்னை
விசும்பி அழ வைப்பான் ..

காதல் பரிசோ இது எனக்கு
காதல் நோய் வந்ததெனக்கு ...

எழுதியவர் : ஸ்வீட்லின் (25-Apr-18, 11:47 am)
சேர்த்தது : sweetlin
Tanglish : kaadhal parisu
பார்வை : 140

மேலே