காதல் பாசம்💟

நான் உன் நெஞ்சில் செய்தேன் வாசம்,
எண் கண்கள் கிறங்க நுகர்ந்தேன்
உன் வாசம்,
வைத்தேன் உன் மேல் உண்மை பாசம்,
இல்லை இதிலொரு வெளிவேஷம்,
சில கண்கள் பொறாமை பார்வை வீசும்,
நம் உண்மை காதலை உலகம் பேசும்,
நினைத்து பார்ப்பதில் நெருங்கும் உனது நேசம் ,
பிரிந்தாலும், சேர்ந்தாலும் எப்போதும் இவ்வுலகம் ஏசும்

எழுதியவர் : பாலமுருகன் பாபு (25-Apr-18, 1:21 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 159

மேலே