குறும்புக் காற்று அது கரும்புக் காற்று

சித்திரை மாதக் கத்திரி வெயில்
அந்த நிறை மதியத்தில் தன்
வெக்கை முத்திரையை
என்னுடல் முழுவதும்
ஊன்றிப் பதிக்க
குளிர் சுகம் நாடி மின் விசிறியின்
துணையை நாடினேன்
தற்கால மின்துண்டிப்பு
மின் விசிறியும் அன்று
சந்தோஷ ஓய்வு
எடுத்துக் கொண்டது,
காற்றாவது கைதருமா என
அறை யன்னலைத் திறந்தேன்!
ஆஹா ! உடனே உள் நுழைந்து
வீசிய வாடைக் காற்று
உடல் முழுதும் சுழன்று வீசி
என்னை மகிழ்வித்து
மேலும் உள்நுழைந்து
அவள் முகம் காணாத
விரக தாபத்தால்
வெந்து தவிக்கும்
என்னிதய இளவலையும்
குளிர்வித்தது
அத்தோடு நின்றதா அதன்
குறும்புக் கீர்த்தனை
இன்னும்.சீண்ட நினைத்து
அவள் உடலில் இருந்து
வரும் அந்த ரம்யமான
முல்லைப்,பூ வாசனையையும்
எங்கேயிருந்து கொண்டு வந்து
எம்மில் அள்ளி வீசி
முதிரை மரமாய்
விளைந்திருக்கும்
அவள் சிந்தனையை
முற்றிய மர வைரமாய்
ஆக்கி விட்டு அகன்று சென்றது
இது குறும்புக் காற்றா? இல்லை
கரும்புக் காற்றா?
இது உதவி செய்ததா ? அல்லது
எமக்கு உபத்திரவம் செய்ததா ?


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (25-Apr-18, 1:35 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 97

மேலே