நம்பினோர் கெடுவதில்லை
முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசை பட்டதுபோல
இரு கைகள், இரு கால்கள்
இல்லாத ஒரு பிரஞ்சுக்காரர்,
இங்கிலீஸ் கால்வாயை
நீந்திக் கடக்க விரும்பி
செயற்கைக் கால்களோடு
சாதனை புரிய துணிந்தார்
நாளும் கடும் பயிற்சி
நகர்ந்து போயின ஈராண்டுகள்,
விடாமுயற்சி வீண் போகாமல்
இங்கிலீஸ் கால்வாயை
ஈரேழு மணி பொழுதில்
கடந்து சாதனை படைத்தார்,
வாகை சூடிய பின்—அவர்
உதிர்த்த வார்த்தைகள்
“நீந்தும் போது வலி இருந்தது
இருந்தாலும்
நீந்திக் கடப்பேன் என்ற
நம்பிக்கை இருந்தது “ என்றார்
ஊனம் பெரிதல்ல
வானம் பெரிது
அதனினும் பெரிது நம்பிக்கை
நம்பினோர் கெடுவதில்லை