புத்தக புழுவல்ல
எனை புத்தக புழுவென்பார்
பலர் ஆனால் அதில்
வாழும் கூட்டுபுழு என்பது
அறியாதவர்கள் அதில்
உள்ள எண்ணம் எல்லாம்
முழுதாய் என்னுள்
வாங்கி கொள்ள அந்த
எண்ணம் தோற்றுவித்த
வண்ணச்சிறகை விரித்த
வண்ணத்துப்பூச்சியாய்
வானில் வட்டம் இடுவேன்
என் அழகில்
பலரின் உள்ளம் கவருவேன்......!