ரூபிக் க்யூப்பில் அலையும் சொற்கள்

சற்று சாய்ந்தால்
கால் இடிக்கிறது.
காலை நீட்டினால்
உட்கார முடியவில்லை.
நின்று கொள்ள
மனம் வரவில்லை.
ஒருக்களித்து
முட்டுக்கொடுத்தால்
தோள்பட்டை வலி.
போனால் போகட்டுமென
ஓடவும் முடியாது.
நகர்ந்தும் சரிந்தும்
சட்டென நிமிர்ந்தும்
உட்கார்ந்து பார்க்க
சலிப்பே வருகிறது.
ஒரேயடியாக
முழங்காலை மடித்து
புன்னகைத்து பார்த்தாலும்
பொருத்தமாக இல்லை.
சம்மணம் போட
வாய்ப்பே இல்லை.
ஒற்றைக்காலில்
நிற்க இது தவமில்லை.
எப்படித்தான் அமர்வேன்
இந்தக்கவிதைக்குள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Apr-18, 8:04 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 102

மேலே