நீ திட்டமிட்டாயோ

அன்பே
அன்றொருநாள்
ஆவாரம் பூவெடுத்து பின்சடையில்
முல்லை மலர் தொடுத்து
முந்திவந்த மோகமது
முழுவதும் தனியும் முன்பே
முள்ளோடு தனிமையானேனே...!!
அந்திநேரம்
அரங்கேற்றமாகும் முன்னே
அன்பு வழியில் ஆசையென்று
மாமன் மடியில் தலைவைத்து
சாய்ந்தவளே -- சத்தியமாக
நீ என்னை மறந்துவிடுவாயோ...!!
தொடாத பார்வையொன்று
விடாமல் என்னை விரட்டி
உள்ளத்தை பறிகொடுக்க வைத்தவளே...
உள்ளத்தை பறிகொடுத்தவன்
உரிமை கேட்டு இருக்க
ஊரார் ஒன்று சேர்ந்து
என் உருவத்தை வெறுக்க-- உயிரே
உன் வாய்திறந்து
வார்த்தையொன்று பேசமாட்டாயோ...!!
பச்சைநிற தாவணிகட்டி
பாவிமனதை ஏங்க விட்டு
ஒற்றைக் கல்லின் பின்
ஒளிந்து கொண்டு நிற்பவளே...
பரிசம் போடும் வரை
பாயில்தான் படுத்திருந்தாயா?
இல்லை
பாமரன்தானே என்று
என்னை ஏளனமாக நினைத்திருந்தாயா?
வானத்தில் வண்ணக்கோலமிட்டு
அதில் காற்றாக
வசந்தத்தை விட்டு
நாம் இருவர் இணைந்து வாழ
ஆசைக் கொண்டு இருந்தேன்!
அதெல்லாம் இன்று வீண்தானே...!!
பாதையைமாறி நீ சென்றுவிட்டு
பழியினை விதிமேல் போட்டால்
வழக்கிற்கு நான்
யாரை அழைப்பது?....
அன்றாடங்காட்சி இவனிடம்
ஆவண சாட்சி எதற்கென்று
ஆயுள் தண்டனையை
அனுதினம் நான் அனுபவிக்க
அன்பே
நீ திட்டமிட்டாயோ....!!!