கல்லூரி வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
கல்லூரி வாழ்க்கை:😊
கண்கள் முழுவதும் கனவுகளை
சுமந்து வந்த இடம் இது..
கனவுகளை எதிர்நோக்கி கால்
பதித்த முதல் இடம் இது..!
முன்பின் தெரியாத முகங்கள்..
அறிமுகம் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்..
அருகருகில் தயக்கத்துடன் அமர்ந்து
கொண்டோம்..!!
ஒருவித அமைதியோடு ஆரம்பித்தது
நம் அனைவரின் கல்லூரி வாழ்க்கை..
புது புது அனுபங்களை
கற்றுக் கொடுத்தது
இந்த கல்லூரி வாழ்க்கை..
புது புது நண்பர்களின்
அன்பான நட்பையும் பெறச்செய்தது..!
ஒவ்வொரு நாளும் அழகாய் ஓடியது
நண்பர்களின் இன்பமான
இம்சைகளோடு..
திரும்பிய திசைகளில்லெல்லாம்
இன்பம் நிறைந்திருந்து..
எல்லையில்லா குறும்புகள் அடித்தோம்..
இவையெல்லாம் காலத்தின்
இனிமையான பொழுதுகள்..!
உரிமையாக சண்டை போட்டுக்
கொண்டோம்..
ஊர்க்கதை பேசி அரட்டை அடித்துக்
கொண்டோம்..
கனவுகள் பல சுமந்தும் கவலைகள்
தெரியவில்லை..
தோல்விகள் பல கண்டும் மனம்
உடையவில்லை..
உன் கண்கள் வேறு கண்களை தேடும்!!
உன் மனதை காதல் தாக்கி போகும்!!
இரு மனம் இணைந்த காதல்கள்..
இடையில் உடைந்து போன காதல்கள்..
இறுதிவரை சொல்லப்படாத காதல்கள்..
விடைதெரியாமல் போன காதல்கள் என
பல்வேறு காதல்களுக்கு தேசமாக
இருப்பது இந்த கல்லூரி தான்..!
விடிய விடிய போடும் கடலைகள்..
நண்பர்களின் கலாய்ப்புகள்..
சின்ன சின்ன சந்தோஷங்கள்..!
பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!
அப்போதையில் நண்பனின் உளறல்கள்!!
தினம்தோறும் காமெடி கலாட்டாக்கள்..!!
இறுதிவரை கைபிரியாமல்
இருக்கும் புத்தகங்கள்..
தூங்கமல் விழித்து படித்த இரவுகள்..
நம்மோடு தூங்கமல் இருக்கும்
ஹாஸ்டல் மின்விளக்குகள்..
பின்பு தேர்வறையில் தூக்கங்கள்..!!!
கவலைகளின்றி சுற்றி திரிந்தோம்..
சிறகுகளின்றி வானெங்கும் பறந்தோம்..
இறுதிவரை உண்மையாக பழகிய
உறவுகளும் உண்டு!!!
இடையில் உள்ளத்தை உரசிப் பார்த்த உறவுகளும் இங்கு உண்டு!!!
எல்லாரோட மனசுல
ஒரு ஓரத்துலையாச்சும்
ஒருவித கவலை இருக்கும்
கல்லூரி காலம் முடிந்து எல்லாரையும் விட்டு
பிரிய போறோம் ன்னு..!!
சிலர் பிரிந்து போன பிறகு
கவலை கொள்வார்கள்
கல்லூரி வாழ்க்கையை நினைத்து..!!
கல்லூரி வாழ்க்கையை
எப்போது நினைத்து பார்த்தாலும்
அந்த நினைவுகள்
நம் மனதில் ஊஞ்சலாடிக்
கொண்டு தான் இருக்கும்..!
நம்ம வாழ்க்கையில்
மறக்க முடியாத
இனிய அனுபவம்
இந்த கல்லூரி வாழ்க்கை..!!
நான்கு ஆண்டுகள் நொடி பொழுதில்
கடந்துவிட்டது நாம் பிரிந்து செல்ல
நேரத்திற்கு ஏன் இவ்வளவு ஆர்வமோ...?
கனவுகளோடு சேர்ந்து
கண்ணீரோடு பிரிவது தான்
கல்லூரி வாழ்க்கை!!!
பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போல்
தான் கல்லூரி வாழ்க்கை
காலங்கள் கடந்து சென்றாலும்
நினைவுகள் நம் மனதினுள்
இனிமையாய் சிறகடிக்கும்..!
வாழ்வோம் நல் உறவோடு
நல் உள்ளத்தோடு,
உங்கள் எதிர்காலம் நல்லபடியாய்
அமைவதற்கு இந்த நண்பனின்
அன்பான வாழ்த்துக்கள்,
அனைத்து இறுதி ஆண்டு
நண்பர்களுக்கு என்கவிதை
ஓர் அன்பு பரிசு😍
உங்களை பிரிந்து செல்பவனாக,
❤சேக் உதுமான்❤