பிறந்த நாள்

நான் உன்னை பார்க்கவில்லை
நீ மட்டும் என்னை பார்த்தாய்..
நான் அழவில்லை
நீ தான் அழுதாய்..
நான் அழுதேன்
நீ புன்னகைத்தாய்..
நான் பிறவி எடுத்தேன்
நீயோ மறுபிறவி எடுத்தாய்..
அன்று பிறந்தது
நான் மட்டுமல்ல
நீயும் தான்..
எனவே இன்று பிறந்தது
நாம் இருவருமே...
பிறந்தநாள் வாழ்த்து
நாம் இருவருக்குமே..

எழுதியவர் : (2-May-18, 5:56 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : pirantha naal
பார்வை : 2035

மேலே