போதையில்
ஏழு சுரங்களில்
என்ன மாயம் இருப்பதை மனிதன்
கண்டறிந்தானோ? -- அதைநான்
கண்டறியச் செல்லும் போதெல்லாம்
கண்மூடச் செய்து அடிமையாக்கிவிடுகின்றது!
இசை விருந்து...!!
எந்நிலையில் நானிருந்தாலும்
என் நிலையை மறந்து
இசைமேல் ஏதோ ஒரு
ஈர்ப்பு கொண்டு-- அது
என் இதயத்தில் குடிக்கொண்டு...
எல்லையில்லா ஒரு போதையில்
எப்போதுமென்னை மூழ்கடிக்கின்றதே...!!