காதல் ஒரு ஞான சூனியம்

காதல் சொல்ல வந்த பூனைக் குட்டி நீ,
புலிக் குட்டியாய் மாறியதென்ன?
அன்பு வைத்த அவள் மீது வஞ்சம் வைப்பதும் ஏனடா?
காதல் கொண்ட நெஞ்சத்தில் மோதல் வளர்க்கிறாயே ஏனடா?
உன் நிலை எனக்கு புரியல,
உண்மை என்ன? எடுத்துக் கூறு...

புயலாக இருந்த நீ தென்றலானது ஏனடி?
உலகமே மேலை நோக்கி நகர,
மேலையிலிருந்து நீ கலாச்சாரம் நோக்கி வருகிறாயே ஏனடி?
மாற்ற பிறந்தது எங்கடி?
உன் மாற்றத்திற்குக் காரணம் யாரடி?

எல்லாம் பொய்யானதை போல் பிறந்த மாற்றத்தின் காரணம் யாரடா?
ஞானத்தை மூடி மறைக்கும் காதல் மாயை மனதில் தோன்றியதும் ஏனடா?
ஒவ்வொரு கணத்திலும் ஞாபகம் தொலைந்திட புதியதாய் பிறந்த பிள்ளை போல வாழ்க்கை மாறியதும் ஏனடா?

என்ன உணர்வுகள் இவை!
குட்டி போட்ட பூனையாட்டம் அங்கேயே சுற்றுகின்றன.
வாழைப்பழம் கண்ட குரங்காட்டம் அங்கேயே தாவுகின்றன.
மனித மூளையில் பதிந்தது அது ஒன்று தானா?
விடுபட்டு வாழும் வழியில்லையா?

அலசிப் பார்க்கையில் வெளிப்படுகிறது மனித இயலாமை.
முயலாமையால் இயலாமையில் அகப்பட்ட மனிதனுக்கு புத்தி வீழ்ச்சி ஏற்பட்டு சர்வநாசம் சம்பவமாக தொடங்கிற்று.
தப்பிக்க அன்பால் ஒளிரும் அறிவை நாடுங்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-May-18, 9:16 am)
பார்வை : 412

மேலே