எங்கே போகிறது வாழ்க்கை

இன்றைய நிலையே வேறு
எதிலும் அவசரம்
அதிவேகம்
எடுத்தேன் கவிழ்த்தேன்
எனும் நிலை

காலையில் காதல்
மாலையில் பதிவு திருமணம்
மறுநாள் காலையில்
கருத்து வேறுப்பாடு
பின்பு விவாகரத்து கோருதல்

மரணம் ஜனனத்தின்
பின்னாலேயே
ஒலிந்திருந்தாலும்
ஜனனத்தின்
மகத்துவம் வேறு
அழுகையும் சிரிப்பும்
கலந்தது தான் வாழ்க்கை
என்பதை புரிந்துக்கொள்ள
ஏன் மறுக்கிறார்கள்...

மாதாமாதம் நம்
வங்கி கணக்கில்
பணம் கூடுவதுப்போல்
வாழ்க்கையில் அன்பும்
அரவணைப்பும் கூடுவதில்லை

கோடி ரூபாய் செலவழித்து
வீடு கட்டுகிறோம்
இதை வீடாய் பாவிப்பதில்லை
தங்கும் விடுதியாக மாற்றுகிறோம்
இந்த அறையில் இருந்து
அடுத்த அறைக்கு கைபேசியிலே
பேசிக்கொள்கிறோம்...

இன்று வீடுவரை கூட
உறவு இல்லை
வீதிவரை மனைவி
எப்படி வருவாள்
அப்பாவை எதிரியாக
பார்க்கும் இளையசமுதாயம்
எப்படி பாசத்தை
அடுத்த சந்ததியினர்க்கு
எடுத்து செல்வார்கள்

அன்று
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி

அன்று
வீடு நிறைய குழந்தைகள்
இன்று
வீட்டுக்கொரு குழந்தை
இன்னும் சிலருக்கு
அதுவும் இல்லை
வாழ்க்கைமுறை மாற்றத்தின்
விளைவு...

சித்தப்பா சித்தி
அத்தை மாமா
பெரியப்பா பெரியம்மா
அண்ணன் அண்ணி
என்ற உறவுமுறைகள்
வெறும் அகராதியில் தான்
தேடவேண்டும்
இப்படியே போனால்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-May-18, 5:34 am)
பார்வை : 284

மேலே